ஈஸ்வரியிடம் கோபி பற்றிய உண்மைகளை சொன்ன எழில் மற்றும் தாத்தா – வீட்டில் நடிக்க போகும் அசம்பாவிதம்.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

bakkiyalakshmi-
bakkiyalakshmi-

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்து மிகவும் விருப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலக்ஷ்மி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா ஒரு பக்கம் மயூவை சமாதானப்படுத்த மயூவின் அப்பா ராஜேஷ் வந்து என்னுடைய பெண்ணை என்னிடம் கொண்டு செல்ல நான் எல்லா வேலையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனக் கூறி சத்தம் போட்டு போக..

மறுபக்கம் ராஜேஷ் கோபி வீட்டுக்கு வந்து கோபியை தப்பு தப்பாக பேசி விட்டு திரும்பியதால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளன கோபியின் உண்மை அனைத்தையும் தெரிந்த தாத்தா மற்றும் எழில் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகின்ற நிலையில் ஈஸ்வரி எழில் இடம் கேள்வி மேல் கேள்வி கேட்க

தாத்தா நான் சொல்றேன் கோபி நல்லவன் கிடையாது அவனுக்கு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கு இந்த விஷயம் எனக்கும் எழிலுக்கு மட்டும் தான் தெரியும் எனக் கூறியதால் ஈஸ்வரி மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.

பின்பு ஈஸ்வரி கோபிக்கு உடனடியாக போன் செய்து இங்கு தாத்தா மற்றும் எழில் உன்னை பற்றி என்னென்னவோ சொல்கிறார்கள் நீ எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு வா என சொல்லி போனை வச்சதும் கோபி வீட்டில் என்ன நடந்ததோ என தெரியாமல் காரை மிக வேகமாக பதட்டத்துடன் ஓட்டி வருகிறார்.

இனியா ஒரு பக்கம் அழுது கொண்டே நான் அம்மாவை கூப்பிட்டு வரேன் என பாக்கியலட்சுமி சமைக்கிற இடத்திற்கு அழுது கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது மேலும் நாளை கோபி வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி என்ன முடிவு எடுப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.