திரிஷாவுடன் அஜித் “Efforts Never Fail” வெளியானது விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய போஸ்டர்..

அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமும் இதுதான்.

இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் கடந்த மாதம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த போஸ்டரில் அஜித் நடந்து செல்வதை போல் கெத்தாக இருந்தது அதேபோல் கையில் துணி பையை ஏந்தியபடி நடந்து வருவது போல் இருந்தது. முழு ஆக்சன் திரில்லரில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார் இவர் ஏற்கனவே ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் காம்போ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. அப்படி இருக்கும் நிலையில் திரிஷா விடாமுயற்சி திரைப்படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார்கள் இந்த நிலையில் அஜித்துடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vidamuyarchi trisha
vidamuyarchi trisha