ஐஷுக்கு ஷாக் கொடுத்த போன் கால்.. பிரியாவுடன் சேர்ந்து வாழ காவியா கிட்ட உதவி கேட்கும் ஜீவா.. ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடு.

Eeramana rojave
Eeramana rojave

Eeramana rojave :  இன்றைய எபிசோடில் அருணாச்சலமும் பார்வதியும் கல்யாண பெண்ணுக்கு தேவையான நகை புடவை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கின்றனர். வீட்டுக்கு வந்ததும் மஞ்சுளா மற்றும் பாஸ்கரை கூப்பிட்டு ஒரு தாய் மாமனா ஐஷுக்கு செய்ய வேண்டிய கடமை இது என்று புடவை நகை மற்றும் திருமாங்கல்யம் ஆகியவற்றை வாங்கிட்டு வந்து தருகின்றனர்.

பிறகு அருணாச்சலம் ஜீவாவிடம் நீயும் பார்த்தியும் தான் அர்ஜுன் கல்யாணத்தை தலைமையேற்று நடந்தனும் என்று சொல்கின்றனர். உடனே ஜீவாவும் அர்ஜுன் கிட்ட உனக்கு கல்யாணத்துக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் ரெடி பண்றேன் என்று சொல்கிறார்.

பிறகு நைட் தூங்கி கொண்டிருக்கும் பொழுது ஐஸ்வர்யாவிற்கு புது நம்பரில் இருந்து போன் வருகிறது. அதை அட்டென்ட் பண்ணி யார் என்று கேட்க நான் தான் சங்கர் மறந்துட்டியா என்று ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். கடைசியாக ஜீவா காவியாவிடம் சென்று எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண வேண்டும்..

உடனே காவியா என்னன்னு சொல்லு என கேட்பதும் பிரியாவுக்கும் எனக்கும் தனி குடுத்தனம் போற விஷயத்துல பிரச்சனையாயிடுச்சு, நீ தான் அவகிட்ட கொஞ்சம் பேசி பார்க்கணும்.. பிரியா இன்னும் தனி கொடுத்தனம் கூப்பிட்டுக்கிட்டே இருக்கா, நானும் ஒரு கோவத்துல..

டிவோஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டுட்டேன் என்று சொல்ல பிரியா உன் மேல எவ்ளோ அன்பு வச்சிருக்கா நீ இப்படி பண்ணுனா அவளுக்கு கோவம் வரும் தான் முட்டாள் தனமா இப்படி பண்ணி இருக்க என காவியா ஜீவாவை திட்டுகிறார். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.