Eeramana rojave : இன்றைய எபிசோடில் ஜீவா பிரியா கிட்ட அப்பா ஹாஸ்பிடல்ல உயிர் பிழைக்க கிடக்கிறார் உனக்கு அவர வந்து பாக்கணும்னு தோணல இல்ல, அவரோட பொண்ணா தான உன்ன பார்த்தாரு உனக்கெல்லாம் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட்டதுல தப்பே இல்லை என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மஞ்சு பாப்பா அங்கு வந்து அக்கா அருணாச்சலம் மாமாவுக்கு நெஞ்சுவலி வந்ததுல அதிர்ச்சியாகி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க, நான் ஸ்கூல் முடிச்சு வந்து தான் பார்த்து அவர்களை எழுப்பினேன் என்று சொல்வதும் ஜீவா இது தெரியாம பிரியாவை தப்பா பேசிட்டோமே என்று நினைக்கிறார்.
பிறகு பிரியா நான் மாமாவை உடனே பார்த்தாகும் என்று சொல்வதும் ஜீவா காரில் பிரியாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிறார். அங்கு காவியா அருணாசலம் குணமானதால் அங்குள்ளவர்களுக்கு மிட்டாய் கொடுத்துட்டு இருக்கிறார் இதைப் பார்த்த பார்வதி காவியா என்னை மன்னிச்சிடுமா உன்னோட நல்ல மனசு புரிஞ்சிக்காம உன்னை திட்டிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.
அடுத்து பிரியா ஜீவா கிட்ட என்கூட தனிக்குடித்தனம் வரிங்களா என்று கேட்க ஜீவா பதில் சொல்லாமல் இருக்கிறார் அதனால் மாமாவுக்கு உடம்பு சரியானதும் அவர்கிட்ட நீங்க கையெழுத்து போட்ட டிவோஸ் பேப்பரை காமிச்சிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுவேன் என்று சொல்கிறார்.
பிறகு அருணாச்சலம் கண்விழித்ததும் எல்லோரும் அவரை பார்க்கின்றனர் பிறகு வீட்டிற்கும் அழைத்து சென்று விட்டனர் அங்கு பிரியா மற்றும் காவியா இருவரும் அருணாச்சலத்திற்கு ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்கின்றனர். பிறகு அடுத்த நாள் எல்லோரும் கோவிலுக்கு செல்கின்றனர் அங்கு பூசாரி அருணாச்சலத்தை எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார்.
பிறகு உங்களுக்கு இப்படி ஆனதும் பிரியா எனக்கு போன் பண்ணி மாமா பேர்ல அர்ச்சனை பண்ணுங்க மற்றும் 100 ஏழை மக்களுக்கு அன்னதானமும் போடுங்கள் என்று சொல்லி இருந்தார் அவரது பிரார்த்தனை தான் உங்களை காப்பாற்றி இருக்கு என்றும் அவர் சொல்கிறார். பிறகு கோவிலில் எல்லோர் பெயரிலும் அர்ச்சனை நடக்கிறது.