ஜீவா வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு நடுத்தெருவுக்கு வந்த பிரியா.! கண்ணீருடன் பதறி அடித்துக் கொண்டு ஓடிவரும் ஜீவா.! ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோட்.

eeramana-rojave
eeramana-rojave

ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோடில் பிரியா காவியாவிடம் ஜீவா என்னிடம் உண்மையாக இல்லை ஜீவா என்னை ஏமாற்றி விட்டார். அவருக்கு நான் கொஞ்சம் கூட முக்கியமே கிடையாது என்னை ஏமாற்றி கிட்டு அவரையும் ஏமாற்றி கொள்கிறார் என அழுது கொண்டே கூறிக் கொண்டிருக்கிறார். ஜீவா உடைய வாழ்க்கையை வீணாக்க நான்  விரும்பல. பிரியா  ஜீவா உடைய இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் என்ன வேணா தண்டிச்சுக்கோ என கூறுகிறார் காவியா, ஆனால் உன்னை தண்டிக்கிறதால என் வாழ்க்கை மாற போவதில்லை என கூறிவிட்டு ஜீவா வீட்டு நிரந்தரமாக பிரிய போவதாக காவியாவிடம் கூறுகிறார்.

நீ இனிமே தான் உன் வாழ்க்கையை ஆரம்பிக்க போற சந்தோஷமா இரு, என்ன பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாதே, என் மேல அன்பு காட்ட அப்பா அம்மா தவிர வேற யாரும் இல்ல என காவியாவிடம் பிரியா அழுது கொண்டே கூறிக் கொண்டிருக்கிறார். பின்பு காவியாவிடம் பேசிவிட்டு வெளியே வருகிறார். வாசலில் ஜீவாவின் அப்பாவும் அம்மாவும் பதற்றமாக நின்று கொண்டிருக்கிறார்கள் காவியா பிரியா இவ்வளவு நேரம் என்ன பேசிகிட்டு இருக்காங்க என குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் பிரியா வெளியே வருகிறார் அப்பொழுது அம்மாடி பிரியா என ஜீவாவின் அப்பா கேட்க அதற்கு பிரியா ஜீவா என்னிடம் உண்மையாக இல்லை, அவர் வாழ்க்கையில் இனி நான் கிடையாது அவராவது நிம்மதியாய் இருக்கட்டும். அவரை விட்டு நிரந்தரமாக பிரிய போகிறேன் என அவர்களுக்கு புரியும் படி கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா இல்லவே இல்லை இது ஒரு பொம்மை கல்யாணம் என பிரியா அழுது கொண்டே கூறுகிறார்.

உடனே ஜீவாவின் அப்பா வயசுல பெரியவன் நான் சொல்றத கேளு உன் அப்பா மாதிரி நீயே சொல்லுவல்ல நான் சொன்னா கேக்க மாட்டியா எனக் கூறுகிறார். எல்லாரும் வீட்டுக்கு போவோம் அங்கேயே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.  சாரி மாமா உண்மையா இல்லாத ஒருத்தர் கூட என்னால சேர்ந்து வாழ முடியாது மாமா என அழுகிறார். எனக்கு ஜீவா வேண்டாம் என ஒரே வார்த்தையில் கூறி விடுகிறார்.

என்னையும் அவரையும் சேர்த்து வைத்து அவர் வாழ்க்கையும் நல்லா இருக்க போறது இல்ல என் வாழ்க்கையே நல்லா இருக்க போவதில்லை என்ன மன்னிச்சிடுங்க மாமா என்ன கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்புகிறார். ஜீவாவை இனி என்னை  தேட வேண்டாம்னு சொல்லிடுங்க எனக் கூறுகிறார் அவர் வாழ்க்கை நல்லபடியாக மாற  நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் எனக்கூறி விட்டு கிளம்பி விடுகிறார்.

ஜீவா தன்னுடைய மாமாவிடம் அவ இனிமேல் புரிஞ்சிக்கவே மாட்டா என ஜீவா கூறுகிறார் அந்த சமயத்தில் அவரின் மாமா காதலிச்சதை சொல்ல மறச்சுட்ட அதனாலதான் அவளுக்கு கோபம், எனக் கூறுகிறார். ஜீவாவின் அப்பா பதறி போய் ஜீவாவிடம் பிரியா கிளம்பிவிட்டார் என கூறுகிறார் உடனே ஜீவா பிரியாவை தேடி போகிறார். பிரியா நடந்த அனைத்தையும் நினைத்து பார்க்கிறார்.

ஜீவாவும் பழசை நினைத்து பார்க்கிறார் அப்பொழுது ஜீவாவின் கண்களில் கண்ணீர் வருகிறது உடனே ஓ மனமே ஓ மனமே என்ற பாடல் ஒலிக்கிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.