Eeramana rojave : இன்றைய எபிசோடில் கையெழுத்து போட்ட டிவோஸ் பேப்பர் எங்க இருக்கு என பிரியா கபோர்ட்டில் தேடிக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த பிரியா என்ன பண்றீங்க என்று கேட்க தனி குடுத்தனம் வா இல்லன்னா டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடு என நீ கேட்டதால் ஒரு கோபத்தில் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டேன்.
இப்ப அத வச்சு நீ மிரட்டிட்டு இருக்கு அந்த பேப்பரை கொடு நானே கிழிச்சு போட்டு விடுறேன் என்று ஜீவா கேக்க பிரியா நீங்க என்கூட தனி கொடுத்தனம் வரேன்னு சொல்லுங்க நானே கிழிச்சு போடுறேன் என்று சொல்லுகிறார். பிறகு அருணாச்சலம் குடும்பத்தில் ஒரு முக்கியமான முடிவு ஒன்று எடுத்திருக்கிறார் அதனை கூறுவதற்காக எல்லாரையும் வரச் சொல்கிறார்.
ஹார்ட் அட்டாக் வந்ததில் நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருக்கேன் இந்த மாச கடைசி ஓட நான் எல்லா வேலையில இருந்தும் விலகிக்க போறேன், இனிமேல் எல்லா கம்பெனியும் நீங்க தான் பாத்துக்கணும் என்று தன் மகன்களிடம் சொல்கிறார். அதன்படி ஜீவா மற்றும் பார்த்தி இடம் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் இரண்டையும் ஆளுக்கு உன்னு தனித்தனியா பார்த்துக்கோங்க என்று சொல்கிறார்.
பிறகு அர்ஜுனிடம் நீ காலேஜ் படிப்பை முடித்த பிறகு நம்ப எக்ஸ்போர்ட் கம்பெனியை பாத்துக்கோ என்றும் சொல்கிறார். இதற்கு பார்த்தியும் ஜீவாவும் ஏன் இப்ப பிரிக்கணும் நாங்க ஒன்னாவே வேலை செய்கிறோம் என்று சொல்கின்றனர் ஆனால் அருணாச்சலம் நீங்க தனித்தனியாகவே இனிமே பாருங்கள் என்று சொல்லிவிடுகிறார். இதற்கு பிரியா மற்றும் காவியாவும் நீங்க எது செஞ்சாலும் சரியா தான் மாமா இருக்கும் என்றும் சொல்கின்றனர்.
அடுத்து சக்தி அர்ஜுன் கிட்ட நீ என்னை காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லு வீட்ல நான் பேசுறேன் எனக்கு கவின கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கல என்று சொல்கிறார் ஆனால் அர்ஜுன் எங்கப்பா எங்க அத்தைக்கு ஐஷுவ நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கிறார். அதனால அப்பாவுடைய வாக்க நான் காப்பாத்தணும் என்று சொல்லிவிட்டார். பிறகு ஒரு பார்க்கில் ஐஸ்வர்யாவிற்கும் அர்ஜுனுக்கும் ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் நடைபெறுகிறது.
எதார்த்தமா அந்த பார்க்குக்கு வந்த சக்தியும் இதனை பார்த்து கண் கலங்குகிறார். பிறகு காவியா ரூமில் படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கரண்ட் கட் ஆகிறது உடனே பார்த்தி மெழுகுவர்த்தி எடுத்துட்டு வந்து கொடுத்துவிட்டு இன்வெர்ட்டர் வேலை செய்யல நாளைக்கு தான் சரியாகும் இதை வைத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது.