Eeramana Rojave : இன்றைய எபிசோடில் அருணாச்சலம் குடும்பம் எல்லோரும் கோவிலுக்கு வந்திருக்கின்றனர். அங்கு ஜீவா பிரியாவிடம் நான் சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட தெரியுமா? நீங்க என் கூடவே எங்க வீட்டிலேயே இருந்தீங்கன்னா.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் போடறதா வேண்டியிருக்கேன் என்று சொல்வதற்கு பிரியாவும் நீங்க என் கூட தனி கொடுத்தனம் வந்தா நானும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் போடுறதா வேண்டியிருக்கிறேன் எது நடக்கிறது என்று பார்ப்போம் என சொல்கிறார். இதே போல் பார்த்தியும் காவியா கிட்ட நான் என்ன சாமி கிட்ட வேண்டிக்கிட்டேன் என்று சொல்லு என கேட்க..
காவியா ஐஏஎஸ் எக்ஸாம் பாஸ் பண்ணனும், கலெக்டர் ஆகணும்னு தான் வேண்டி இருப்பீங்க என்று சொல்ல பார்த்திபன் இதுதான் நான் வேண்டிகிட்டேன் கரெக்டா சொல்லிட்டியே என்று சொல்கிறார். பிறகு ஜீவா அவங்க மாமா கிட்ட ஒரு கோவத்துல டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்ட அதனால தான் பிரியா என்கிட்ட பேசல என்று சொல்கிறார்.
அடுத்து பார்வதி சாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை பண்ணுன பூவ ஜீவா மற்றும் பார்த்திபன் கிட்ட கொடுத்து காவியா மட்டும் பிரியா கிட்ட கொடுக்க சொல்றாங்க.. பிறகு கோவிலில் காவியா என்கின்ற பேர்ல வேற யாரோ தவறி குளத்துல விழுந்துட்டாங்க, உடனே பார்த்தியோட மாமா நம்ப காவியா தான் குளத்தில் விழுந்துட்டா என்று சொல்வதும் பார்த்தி குளத்தில் குதித்து அந்தப் பெண்ணை தூக்கிட்டு வருகிறார்.
மேல வந்து பார்த்தால் அது தன் மனைவி காவியா இல்லை வேறொரு பெண் என்பதால் அந்த பொண்ணை கீழே விட்டு விட்டார் இதை பார்த்து காவியா சிரித்துக் கொண்டிருக்கிறார் பிறகு பார்த்தி நீ என்று நினைத்து அந்த பொண்ண தூக்கிட்டேன் என்று காவியா விடம் சொல்கிறார்.. அடுத்து பிரியா கிட்ட ஜீவா அம்மா பூ உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க.
என்று கொடுக்க நீங்க கொடுக்கிற பூ எனக்கு வேண்டாம் என்று பக்கத்தில் இருந்த ஒரு பாப்பா தலையில் பிரியா வச்சு விட்டுட்டாங்க.. இதை தூரத்தில் இருந்து பார்வதி பார்த்துக் கொண்டிருக்கிறார் பிறகு பிரியாவிடம் ஜீவாவுக்கும் உனக்கும் என்னதான் பிரச்சனை, ஏன் அவன் மேல கோவமாக இருக்க, அவன் நாங்க சொன்னோம்..
என்றதுக்காக அவனோட கனவு ஆசை எல்லாத்தையும் விட்டுட்டு தான் உன்னை கல்யாணம் பண்ணினான். ஆரம்பத்தில் அவன் உன் மேல் கோபப்பட்டாலும் இப்ப மாறிட்டான் அவனை ஏத்துக்கோ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.