நெஞ்சு வலியால் துடிக்கும் அருணாச்சலம்.. இதற்கெல்லாம் நீதான் காரணம் என காவியாவை திட்டும் பார்வதி.. பதிலுக்கு காவியா செய்த சம்பவம் – ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடு

Eeramana roajave
Eeramana roajave

Eeramana rojave : இன்றைய எபிசோடில் அருணாச்சலத்திற்கு நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் அட்மின் செய்துள்ளார். டாக்டர் முதலில் அருணாச்சலத்தை செக் பண்ணி ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று சொல்லி பார்த்தியிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர். பிறகு டாக்டர் அருணாச்சலத்திற்கு ஹார்டுல சிக்ஸ் பிளாக் இருக்கு ..

அதனால உடனே ஆபரேஷன் பண்ணி தான் சரி செய்யணும் என்று சொல்கின்றனர். இதைக் கேட்டுப் பார்வதி அழுது கொண்டிருக்கிறார் அப்போது காவியா அழாதீங்க அத்தை மாமாவுக்கு ஒன்னும் ஆகாது சரியாயிடும் என்று சொல்ல, பார்வதி நீ பேசாத உன்னால தான் அவருக்கு இப்படி ஆச்சு, நீ இந்த வீட்டு வாரிச என்னைக்கி அழிச்சியோ அன்னையிலிருந்து அவர் மன கஷ்டத்துக்கு ஆளானார்.

அதனால் தான் இப்படி நடந்தது என காவியாவை திட்டுகிறார். உடனே பார்த்தி அப்பாவுக்கு இப்படியானத்துக்கு காவியா என்ன பண்ணுவா, அம்மா சொன்னதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத காவியா என காவியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். பிறகு காவியா அங்க உள்ள சாமிகிட்ட மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் டாக்டர் ஆபரேஷன் பண்ண பிளட் வேண்டும் என சொல்லியிருந்தால் ஜீவா அர்ஜுனை பார்த்து உனக்கு அப்பாவோட பிளட் குரூப் தான நீ அப்பாவுக்கு பிளட் கொடு என்று கேட்க அர்ஜுன் நேத்து பிரண்டோட பர்த்டே பார்ட்டில குடிச்சிட்டேன் அதனால நான் பிளட் கொடுக்க முடியாது என சொல்கிறார் உடனே ஜீவா கோவப்பட்டு அடிக்கிறார்.

பார்த்தியும் திட்டுகிறார். இதற்கு காவியா நீங்க குடிக்கிறதால தான் அர்ஜுனுக்கு இந்த பழக்கம் வந்தது முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் அர்ஜுன திட்டலாம் என்று சொல்கிறார். அடுத்து காவியா எனக்கும் மாமாவோட பிளட் குரூப் தான் நான் பிளட் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிளட் கொடுக்கிறார். உடனே டாக்டரும் சக்சஸ் ஃபுல்லா ஆபரேஷனை செய்து முடிக்கின்றனர்.

பிறகு பார்த்தி மற்றும் ஜீவாவிடம் டாக்டர் அப்பா நல்லா இருக்காரு கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாரு அப்புறம் பார்க்கலாம் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். மேலும் பார்த்தி அப்பா உயிர் பிழைச்சத்துக்கு நீ தான் காரணம் என்று காவியாவிடம் கூறுகிறார் பிறகு பார்வதி எங்க பிரியாவ காணும் என்று கேட்க..

ஜீவா என்னன்னு தெரியலமா நான் போய் வீட்ல பாத்துட்டு வரேன் என்று வீட்டுக்கு கிளம்புகிறார் அங்கு பிரியாவிடம் அப்பாவுக்கு சீரியஸ்னு ஹாஸ்பிடல சேர்த்திருக்கோம். ஒரு மரியாதைக்காக என்னாச்சு என்று போன் பண்ணி கேட்டியா என கேட்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.