விவாகரத்துக்கு அப்ளை பண்ணிய ஜீவா.. உண்மை தெரிஞ்சு கதறி அழும் பிரியா – அதிரடி திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோட்

eeramana rojave
eeramana rojave

Eeramana Rojave : இன்றைய எபிசோடில் அட்வகேட் பிரியாவிடம் நாளைக்கு ஜீவா அவர் வைஃப் பிரியாவை டிவோஸ் பண்ண போறாரு, அதனால நாளைக்கு கோர்ட்டுக்கு வரேன்னு சொன்னாரு என்று சொல்வதைக் கேட்டு பிரியா தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகிறார்.

மேலும் என்னோட பர்த்டே கிஃப்டா ஜீவா தரேன்னு சொன்னது இதுதானா எனவும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜீவா பாத்ரூமில் இருந்து வெளியே வந்து இந்த டிவோர்ஸ் பேப்பரை பார்த்து நீ கூப்பிட்ட மாதிரி என்னால தனி கொடுத்தனம் வர முடியாது அதனால உன்னை டிவோர்ஸ் பண்ணலாம் என்று தான் நினைச்சேன் ஆனா நீ என் மேல வச்சிருக்க அன்பை இப்பதான் புரிஞ்சுகிட்டன்..

இந்த பேப்பரை என்னால கொடுக்க முடியாது என நினைக்கிறார். பிறகு ஜீவாவும் பிரியாவும் காரில் ஊருக்கு கிளம்புகின்றனர். அடுத்து காவியா ஐஏஎஸ் எக்ஸாம்க்கு பிரிப்பேர் பண்ண சில புக்ஸ் வேண்டும் என்பதால் ஒரு கடையில் போன் பண்ணி கேட்கிறார் அந்தக் கடையில் இந்த புக் இங்கு இல்லை பெங்களூரில் தான் கிடைக்கும் என சொல்கின்றனர். இதைப் பார்த்தி காதில் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து அர்ஜுன் ஸ்வேதா பேசியதை நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனா வந்து அர்ஜுன் நம்ம ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தலாம் எப்ப உனக்கு டைம் கிடைக்கும்னு சொல்லு என கேட்கிறார் மேலும் அர்ஜுனனுக்கு ஒரு வாட்ச் ஒன்றை கிப்ட் ஆகவும் கொடுக்கிறார். அந்த வாட்சை அர்ஜுன் போட்டு பார்த்துவிட்டு எனக்கு டைட்டா இருக்கு வேண்டாம் என திருப்பி கொடுத்துவிட்டார்.

பிறகு பார்வதி பார்த்தியை சாப்பிட கூப்பிடுகிறார் அப்பொழுது பார்த்திபன் அம்மாவிடம் காவியாவையும் கூப்பிடுங்க என்று கேட்கிறார் ஆனால் பார்வதி நான் காவியாவ கூப்பிட முடியாது என சொல்லிவிட்டார் அதனால் பார்த்திபன் அப்ப நானும் சாப்பிடல என்று கிளம்பி விடுகிறார்.

அடுத்து காவியா ரூமில் பார்க்கும் போது அவள் கேட்ட புத்தகம் எல்லாம் இருக்கின்றன. அதனைப் பார்த்து நம்ம யார்கிட்டயும் புக் வாங்கிட்டு வர சொல்லலையே எப்படி வந்தது என யோசித்து பின்பு பார்த்தியிடம் போய் இந்த புக்ஸ் எல்லாம் நீங்க தான் வாங்கிட்டு வந்தீங்களா என கேட்கிறார். அதற்கு பார்த்திபன் நீ போனில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன்..

என்னோட ஃப்ரெண்ட் பெங்களூர்ல இருந்தான் அவன் கிட்ட சொல்லி இந்த புக்ஸ் எல்லாம் கொரியர் பண்ண சொன்னேன் என்று சொல்கிறார் இதற்கு காவியா என்ன கேட்காம எனக்கு எந்த உதவியும் செய்யாதீங்க இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கட்டும் என பார்த்திக்கு தேங்க்ஸ் சொல்லி அந்த புத்தகத்தை வாங்கிக் கொள்கிறார்.