Eeramana rojave : இன்றைய எபிசோடில் ஜீவா, காவியா கிட்ட எனக்கும் பிரியாவுக்கும் தனி குடுத்தனம் போற விஷயத்துல பிரச்சனை ஆயிடுச்சு அதனால நீ அவகிட்ட கொஞ்சம் பேசு என்று சொல்ல காவியாவும் சரி நான் பேசி பார்க்கிறேன் என்று சொல்கிறார். பிறகு காவியா மஞ்சுளா கிட்ட போய் சித்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று ஐஷு..
நேத்து நைட்டு பதினோரு மணி இருக்கும் யார்கிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தா, அவ பேசுறதை பார்த்தா சண்டை போடுற மாதிரி இருந்தது. அர்ஜுனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்கப்போகுது இந்த டைம்ல இவ இந்த மாதிரி ஒரு பையன் கூட சண்டை போட்டுகிட்டு இருக்கா ஏதாவது பிரச்சனையா இருக்க போது நீங்க என்னன்னு..
கேட்டு கொஞ்சம் சரி பண்ணுங்க என்று அக்கறையில் சொல்ல போக மஞ்சுளா பதிலுக்கு நீ எல்லாம் என் பொண்ண பத்தி தப்பா பேச வந்துட்டியா தம்பி கூட ஊர் சுத்திட்டு அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு அத பார்த்திகிட்டே இருந்து மறைச்சவ தானே நீ, அதனால தானே கர்ப்பமானத கூட பார்த்திக்கிட்ட சொல்லாம முதல்ல ஜீவா கிட்ட சொல்லி இருக்க..
நீ எல்லாம் என் பொண்ண பத்தி பேச வந்துட்ட என காவியாவை கேவலமாக பேசுகிறார் இதைக் கேட்ட ஜீவா வந்து என்னையும் காவியாவையும் இனிமே தொடர்புபடுத்தி பேசுற வேலை வச்சுக்காதீங்க, இனி இப்படி பண்ணீங்கன்னா நாக்க இழுத்து வச்சு வெட்டிடுவேன் என்று சொல்கிறார் பிறகு காவியாவை தராதரம் இல்லாதவங்கள்ட்ட நீ பேசி உன் தகுதியை குறைத்துக்காதே போ என்று சொல்கிறார்.
அடுத்து பிரியா ஹோமுக்கு செல்கிறார் அங்கு சர்வதேச முதியோர் தினம் என்பதால் கேக் வெட்டி கொண்டாட இருக்கின்றனர். ஆனால் பிரியா ஆர்டர் பண்ண கேக் ஷாப்பில் இருந்து கேக் வரவில்லை அதனால் ஜீவா கேக் மற்றும் முதியோர்களுக்கு வேஷ்டி சேலையும் வாங்கிட்டு வருகிறார்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோபிநாத்தையும் ஜீவா அழைத்துக் கொண்டு வருகிறார். பிறகு கோபிநாத் அந்த முதியோர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஒரு வயசான தம்பதிகளை கூப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடுகின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.