விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சீரியலில் காதல் கலந்த ரொமான்ஸ் இருப்பதால் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியாகிய எபிசோடில் பார்த்தியின் அத்தை ஜீவா காவியா இருவரும் காதலித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாரும் இருக்கும்பொழுது டிவியில் போட்டு காமிக்கிறார்.
இதனால் பார்த்தியையும் காவியாவையும் பிரித்து விடலாம் என நினைத்தார் ஆனால் பார்த்தி காவியாவை முழுமையாக நம்புவதாகவும் காவியா தியாகம் செய்திருப்பதாகவும் பார்த்தி காவியாவிற்கு வக்காலத்து வாங்க பார்த்தியின் அத்தை அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் அவர் கிளம்பி விடுகிறார் ஆனால் பிரியா ஜீவா மற்றும் காவியா தன்னிடமிருந்து மறைத்து விட்டார் என எண்ணி அழுது கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.
பிரியாவை அழைக்க சென்ற ஜீவா பிரியாவிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம் ஏனென்றால் பிரியா காவியா சிரிச்சா தான் நீ சிரிப்ப, காவியா கோவமா இருந்தா நீயும் கோவமா இருப்பே, நீ முழுசா காவியாவின் பிரதிபலிப்பு என ஜீவாவை பார்த்து காவியா திட்டிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தலைமுழுகி விட்டு இனிமேல் என் வாழ்க்கையில் ஜீவா இல்லை என தன்னுடைய அம்மாவிடம் கூறிவிடுகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் ஜீவா பிரியாவின் ரூமுக்கு வந்து எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பிரியா வந்து என்னோட ரூம்ல நீ என்ன பண்ணுற என கேட்கநான் இனிமே இங்கதான் தங்க போறேன் என ஜீவா கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஜீவா நான் இங்க தங்கினா நீ எங்க மாறிடுவியோ என நினைச்சா நான் தங்கள என கூற எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது இங்க இருக்கிற பொருளோட உன்னையும் ஒரு பொருளாக நினைத்துக்கொள்கிறேன் நீ எங்க வேணாலும் தங்கிக் கொள் என கூறி விடுகிறார் ஒரே ரூமில் ஒன்றாக இருப்பதால் என் மனசு மாறும் என்று நினைக்கிறாயா ஜீவா என பிரியா கேட்க அதற்கு ஜீவா ஆமாம் எனக் கூறுகிறார் பிறகு பிரியா கிளம்பி விடுகிறார். ஜீவா தன்னுடைய புகைப்படத்தை எடுத்து ஒட்டி சுவற்றில் மாற்றி விடுகிறார்.
இத்துடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிகிறது. இனி வரும் எபிசோட்டில் ஜீவா பிரியாவை அடைவதற்காக பல யுத்தியை கையாள இருக்கிறார் இது ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.