காவியாவையும் பார்த்தியையும் பிரிக்க நினைத்து பல்பு வாங்கிய அத்தை.! பரபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்.!

eeramana-rojave
eeramana-rojave

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலில் ஒன்று ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் இன்னும் விறுவிறுப்பாக தற்பொழுது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜீவாவின் அத்தை ஒரு பெண் டிரைவை கொடுத்து  டிவியில் போடுமாறு கூறுகிறார்.

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள். அந்த பென் டிரைவில் காவியாவும், ஜீவாவும் காதலித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன இதனால் பார்த்திபன் மற்றும் பிரியா  அதிர்ச்சி அடைந்து பார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜீவாவின் அத்தை பார்த்திபனிடம் நீ அவளை நெருங்கும் பொழுது உனக்கு ஜீவாவின் முகம் தானே தெரியும் என உசுப்பேத்தி விடுகிறார்.

உடனே ஜீவாவின் அப்பா அக்கா போதும் நிறுத்து இதோட இனி ஒரு வார்த்தை கூட பேசாத தயவு செஞ்சு நீ இங்கிருந்து கிளம்பி போயிட்டு என கெஞ்சுகிறார். நான் வந்த வேலை இன்னும் முடியலையா நான் எப்படி போவேன் என ஜீவாவின் அத்தை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல்  அந்தத் தாலிய அவ கழுத்துல இருந்து என் கண்ணு முன்னாடி அறுத்து எறிய வேண்டும் என கூறுகிறார்.

அத பார்த்திபன் பண்ணிட்டானா நான் இப்பவே இங்க இருந்து கிளம்பிடுறேன் என அவரின் அத்தை கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு நம்பிக்கை துரோகியோட வாழ போறியா இல்ல நீ கட்டின தாலிய அவ கழுத்துல இருந்து அறுத்து எறிஞ்சிட்டு என் பொண்ணு கூட சேர்ந்து வாழ போறியா என ஜீவாவின் அத்தை கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் வாழ்ந்தால் உன் கூட தான் வாழ்வேன் இல்லன்னா சாவுறேன்னு துணிச்ச என் பொண்ணு எங்க காதலிச்சவனை பக்கத்துலயே வச்சுக்கிட்டு உன்னை ஏமாத்தி உன் கூடவே வாழனும்னு நினைக்கிற இவ எங்க அத கொஞ்சம் யோசிச்சு பாரு என ஜீவாவின் அத்தை கூறுகிறார்.

ரம்யாவின் கால் தூசிக்கு இவ சமமாவாளா இதுக்கு அப்புறம் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் இந்த மாதிரி கேடு கெட்டவங்களோட நீ வாழ போறியா அப்படி சேர்ந்து நீ வாழனும்னு நினைச்சு நான் இந்த ஊரு உலகமே உன்னை கேவலமா பேசும். உன் காது படவே உன்ன அருவருப்பா பேசும் அந்த அவமானத்தை தாங்கிகிட்டு அந்த அசிங்கத்தை சகிச்சுக்கிட்டு இவளோட வாழனும்னு நினைக்கிறாயா என அவரை  கேட்கிறார். இந்த மாதிரி  வாழ்க்கை உனக்கு தேவையா பார்த்தி சொல்லு.

உனக்கு நல்லது செய்றன்னு இந்த அருணாச்சலமும் பார்வதியும் உன் வாழ்க்கையை கெடுத்தது தான் மிச்சம் இப்பவும் நீ சுதாரிக்கலைன்னா வச்சுக்கோ உன் வாழ்க்கை அந்த கடவுளாள கூட காப்பாத்த முடியாது பார்த்தி உன்னை சின்ன வயதிலிருந்து தூக்கி வளர்த்தவர் உன் அத்தை நான் சொல்றேன் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நீ கட்ட்டுன தாலிய கழுத்துல இருக்கக் கூடாது இந்த மேடையிலேயே அறுத்து எறிஞ்சிடு என கூறுகிறார்.

உன்னை ஏமாத்தி இருக்கா பார்த்தி இந்த துரோகியா உன் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிஞ்சிடு. ரம்யாவை ஏத்துக்கோ என அவரின் அத்தை கூறுகிறார். என்ன பிரியா வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசுவ சட்டையெல்லாம் பேசுவ இப்ப எங்க போச்சு உன் பேச்சி கூனி குறுகி நிக்கிற என பார்த்தியின் அத்தை கேட்கிறார். கூட பொறந்த தங்கச்சி அவ உன்னை ஏமாத்தி இருக்கா உன்ன தொட்டு தாலி கட்டிய ஜீவா அவனும் உன்னை ஏமாத்தி இருக்கான்.

நீ இந்த நம்பிக்கை துரோகியோட இன்னும் வாழணுமா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நான் சொல்றத கேளு ஜீவா உனக்கு கட்டண தாலிய கழட்டி அவன் மூஞ்சில தூக்கி எறிஞ்சிட்டு இங்கிருந்து வெளியே போயிடு அவன் உனக்கு செஞ்ச நம்பிக்கை துரோகத்துக்கு நீ கொடுக்கிற தண்டனையா இருக்கட்டும். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஒரே வீட்டில் ஜீவா காவியா உன்கூட தானே இருக்காங்க. இந்த உண்மைய ஒரு நாளாவது உன் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல ஏன் சொல்லல என கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள் ஜீவாவின் அத்தை.

தாலி கட்டுனதுக்கு பிறகாவது எந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல ஏன் சொல்லல என பிரியாவை பார்த்து ஜீவாவின் அத்தை கேட்கிறார். அவங்க தப்பு பண்ணதால தான் இந்த உண்மைய சொல்ல தயங்கி இருக்காங்க என ஒரே போடாக போடுகிறார். ஜீவா தாலி கட்டுனவுடன் உன்கிட்ட சொல்லி இருக்கணும் அப்படி சொல்லலனா அதுக்கு பின்னாடி என்ன நடந்திருக்கும் என்று நெனச்சு பாரு பிரியா என அவரை உசுப்பேத்தி விடுகிறார் அவரின்  அத்தை.

இந்த விஷயத்தை பொருத்தவரை இரண்டு பேருமே கூட்டு களவாணி என கூறுகிறார். காதலித்த இரண்டு பேருமே ஒரே வீட்டில் வேற வேற ஆளோட எப்படி என  முகம் சுளிக்கும்படி கேள்வி கேட்கிறார். உடனே அருணாச்சலம் இதுக்கு மேல எதுவும் பேசாத அக்கா ஏற்கனவே ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு இருக்காங்க மேலும் மேலும் அவுங்களை கஷ்டப்படுத்தாத எனக்கெஞ்சுகிறார். ஆனால் ஜீவாவின் அத்தை இல்ல அருணாச்சலம் பார்த்தியின் முடிவு என்னன்னு தெரிஞ்சுகிட்டு தான் நான் வெளியில் போவேன் என கூறுகிறார்.

மாலையை கழட்டி பார்த்திபன் காவியா வேற ஒருத்தரை காதலிச்சது எனக்கு தெரிஞ்சு தான் நான் கல்யாணம் பண்ணினேன் ஆனா ஜீவாவ தான் காவியா காதலித்தார் என்பது எனக்கு தெரியவே தெரியாது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலித்து உள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது என பார்த்தி கூறுகிறார். ஜீவாவுக்கும் எனக்கும் 25 வருஷம் பந்தம் இருக்கு இதுவரைக்கும் என்கிட்ட எதுவும் மறச்சதில்ல ஆனால் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மறைச்சி இருக்கானா என பார்த்தி கூறுகிறார்.

காவியாவும் ஜீவாவும் எனக்கு துரோகம் செஞ்சுட்டாங்க தான் ஆனா அது உங்க பார்வையில தான் என அத்தையை பார்த்து கூறுகிறார். குடும்ப நல்லதற்காகவும் குடும்ப கவுரத்துக்காகவும் இதுவரை அவங்க வலியை வேதனையை ரெண்டு பேர் மட்டுமே அனுபவிச்சுக்கிட்டு இருந்தாங்க. காவியாவும் ஜீவாவும் இந்த குடும்பத்துக்கு செஞ்ச தியாகத்தை நீங்க கொச்சை படுத்துறீங்க என அவரின் அத்தையை பார்த்து பார்த்தி கேள்வி கேட்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலை தான் காவியா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா காவியா இந்த குடும்பத்துக்காக தன்னையே மாத்திக்கிட்டா அப்படிப்பட்ட ஒருத்திய ஒரு காலம் நான் இழக்க விரும்பல அத்தை என பார்த்தி அவரின் அத்தையை பார்த்து கூறுகிறார். உன்ன மாதிரி பைத்தியக்கார பையன் இருக்கிறதால தான் இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் உருவாகுறாங்க. ஜாலியா காதலிக்கிறது ஊரு ஊரா சுத்துறது எல்லாம் முடிஞ்ச பிறகு வேற ஒருத்தனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறது என அவரின் அத்தை மேலும் மேலும் குத்தி கிழிக்கிறார்.

ஆனால் பார்த்தி கொஞ்சம் கூட மாறாமல் காவியா மீது அதிக காதல் காட்டுவேன் என அத்தையிடமே கூறுகிறார் அதனால் அத்தை இன்னும் கோபமாக இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு நானுக்கிட்டு தொங்கலாம் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் பார்த்தி காவியா ஜீவாவை காதலித்து விட்டார் என கூறி அத வச்சி என்னிடமிருந்து காவியாவை பிரிக்கணும்னு நினைச்சீங்கன்னா உங்களை விட பெரிய முட்டாள் யாருமே கிடையாது என பார்த்தி கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.