இனி வரபோற விஜயின் படங்கள் ஒவ்வொன்றும் 250 கோடி பட்ஜெட் தானா.? வெளியான அதிர்ச்சி தகவல்.

vijay
vijay

தளபதி விஜய் சைலன்டாக திரை உலகில் இருந்தாலும் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பேசுவதால் அவரது ரசிகர்கள் அந்த படத்தை இன்னும் வேற லெவலுக்கு எடுத்துக்கொண்டுபோய் கொண்டாடுகின்றனர். தலைவா, மெர்சல் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விஜய்க்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்து உள்ளதால் அடுத்தடுத்து வரப்போகும் பீஸ்ட் படத்தையும் வேற லெவலில் படக்குழு மற்றும் இணையதள பக்கங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை எந்த ஒரு படத்தில் நடிக்கும் போதும் அடுத்த படத்தின் அப்டேட் விஜய் கொடுக்க மாட்டார் ஆனால் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விஜய் ஒரு பேசும் பொருளாகவே இருந்து வருகிறார். சினிமாவையும் தாண்டி தற்போது அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்டி வருகிறார் அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகின்றன.

விஜய்யின் மக்கள் இயக்கம் ஊராட்சி மன்ற தேர்தல்களில் தற்போது போட்டியிட்டு ஓரளவிற்கு நல்ல இடத்தைப் பிடித்துள்ளது.இதுவே அவர்களுக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது இது இப்படியிருக்க விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்துவருகிறார் அதை முடித்த கையோடு தனது 66 தெலுங்கு சினிமாவில் முதல்முறையாக அடியெடுத்து வாஞ்சி உடன் கைகோர்க்க இருக்கிறார்.

அதன் பிறகு யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 67 திரைப்படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடனே அவர் கைகோர்க்கிறார்.மேலும் தளபதி 68படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார் 69 திரைப்படத்தை அட்லி அல்லது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கணிக்கப்பட்டுள்ளது. தளபதி தற்போதைய ஒரு படத்திற்கு கிட்டதட்ட 100 கோடியை சம்பளமாக பேசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி பார்த்தால் வருகின்ற திரைப்படங்களில் அதற்கு மேல் இருந்தாலும் இருக்கும் இதனால் இனி விஜயின்  ஒரு படத்தின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இவர் நடிக்க உள்ள மொத்த படங்களையும் சேர்த்து பார்த்தாலே 1000 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.