அஜித் 61 திரைப்படத்தில் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருக்கும்.! யார் இணைந்துள்ளார் பார்த்தீர்களா.?

ajith 61 mass update
ajith 61 mass update

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் சமீபத்தில் H வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித் 61 படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில். அஜித் இந்த திரைப்படத்தில் இரண்டு ரோல்களில் பண்ண இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ள இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் ஸ்டன்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தில் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருந்தது போல் இந்த திரைப்படத்திலும் மாஸ் ஸ்டன்ட் காட்சிகள் அமையும் என தெரிகிறது.

மேலும் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். திரைப்படம் முழுக்க முழுக்க வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகும் எனவும் படம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக போகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் இணையும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ajith 61 mass update
ajith 61 mass update