தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் துணிவு திரைப்படம் ஒரு ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என எச் வினோத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக கிராபிக்ஸ் பணிகள் நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் துணிவு படத்தில் இடம்பெறும் ஒரு பிரமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர். இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் கல்யாண் அவர்கள் நடனம் அமைக்கிறார் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர்.
இந்தப் பாடலை இசையமைப்பாளரும் பாடகரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி அவர்கள் இந்த பாடலை பாடியுள்ளார் மேலும் இந்த பாடலின் ஆரம்ப வரிகள் காசேதான் கடவுளடா அந்த கடவுள் தான் இப்ப படுத்துதப்பா என்று இந்த பாடல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் வரிகள் இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் எச் வினோத் அவர்கள் துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருந்தார் அதில் துணிவு திரைப்படம் பொங்கலில் வெளியாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.