கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.!!

Actor vijayakanth video: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த மாநில அரசும் மத்திய அரசும் தங்களால் முடிந்த அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

அதேபோல நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அவரது மனைவி பிரேமலதா ஹேர்கட் முதல் பெடிக்யூர் வரை அனைத்தையும் செய்து உள்ளார்.

பிரேமலதா அவர்கள் தனது கணவருக்கு அழகு நிலையத்தில் செய்வதைப் போன்று சேவிங் செய்வது, டை அடிப்பது, பெடிக்யூர், மெனிக்யூர் என அனைத்தையும் செய்வதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் அரசியல் தொண்டர்கள் என அனைவரும் பிரம்மித்து உள்ளனர். விஜயகாந்த் அவர்கள் மிகவும் கம்பீரமாக இருந்தவர் என அனைவருக்கும் தெரிந்தது. தற்போது உடல்நிலை குறைவால் இருக்கும் இவரைப் பார்க்கும்போது தொண்டர் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.