மங்காத்தா 2 மாதிரிதான் துணிவு இருக்கும்.! பிரபலம் ஒரேபோடு

thunivu
thunivu

நடிகர் அஜித்குமார் தற்போது எச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படமும் அதே தினத்தில் மோத உள்ளது.

இதனால் ரசிகர்களிடையே பதட்டங்கள் ஏற்பட்டு இருக்கிறது இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலும் “தீ தளபதி” பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து  அஜித்தின் துணிவு திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள துணிவு படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் சில்லா சில்லா பாடல் வாரிசு படத்தில் அமைந்து உள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை ஓவர்டேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது வாரிசின் ரஞ்சிதம் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 60 நிமிடங்களில் 500 லைக்குகள் மட்டும் பெற்று இருக்கிறது.

ஆனால் அஜித்தின் துணைவி படத்தில்  இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் வெளியாகி 60 நிமிடத்தில் 533 லைக்குகளை பெற்று ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை ஓவர்டேக் செய்துள்ளது இதைதான் ரசிகர்கள் ட்ரென்ட்டாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படம் மங்காத்தா இரண்டாவது பாகம் போல இருக்கும் என்று ரமேஷ் பாலா பிரபல youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது சில்லா சில்லா பாடல் ஒரு செலிப்ரேட் பாடலாகும். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், அமீர், பாவனி, சிபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் அமீர், பாவணி, சிபி, ஆகிய மூவரும் அஜித்தின் டீமில் உள்ளவர்கள். அதுமட்டுமல்லாமல் சில்லா சில்லா பாடல்களிலும் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் இதனால் இந்தப் பாடலுக்கு முன்பு ஒரு தரமான சம்பவம் செய்துவிட்டு இருக்கிறார்கள் அந்த சந்தோஷமான சூழ்நிலையில் இந்த சில்லா சில்லா பாடலை வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் தனது டீம் நண்பர்களுடன் கோடிக்கணக்கான படங்களை கைப்பற்றி இருப்பார்கள் அதை கொண்டாடும் விதமாக ஒரு பாடலை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதே போல துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக ரமேஷ் பாலா கூறியுள்ளார்.