விக்ரம் படத்தை தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பும் துல்கர் சல்மானின்” சீதா ராமம்” – 4 நாள் முடிவில் எவ்வளவு தெரியுமா.?

kamal-
kamal-

தென்னிந்திய சினிமா உலகில் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வி பெறுகின்றன. இதில் ஒரு சில படங்கள் மட்டுமே பிரம்மாண்டமான வசூலை அள்ளி புதிய சாதனை படைக்கும் அந்த வகையில் இந்த வருடம் இளம் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம்.

இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது மேலும் வசூல் ரீதியாக சுமார் 420 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு தென்னிந்திய திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும்..

பெரிய அளவில் வசூலை கட்டவில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் தான் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சீதா ராமம். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று தற்போது வெற்றிகரமாக  திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, கௌதம் வாசுதேவ் மேனன், முரளி சர்மா, கிஷோர் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து அசதினார். படம் வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து நல்ல வசூலை கண்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில்  சீதா ராமம் திரைப்படம் நான்கு நாள் முடிவில்  எவ்வளவு வசூல் செய்தது என்பது தகவல் கிடைத்து உள்ளது.

அதன் படி பார்க்கையில் நான்கு நாட்களில் சுமார்  25 கோடி அள்ளி புதிய சாதனை படைத்து உள்ளது. வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் எதுவும் இல்லாதால் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்ரம் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.