அண்மைக்காலமாக சினிமா உலகில் பார்ட் 2, பார்ட் 3 படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் சந்திரமுகி இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகியது. ரஜினி உடன் கைகோர்த்து நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜயகுமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்த படம் திரில்லர், காமெடி படமாக உருவாகி இருந்தது படம் வெளிவந்து தாறுமாறாக இருந்த காரணத்தினால் 1000 நாட்கள் ஓடி அசத்தியது. மேலும் எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளியது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமான இயக்குனர் அப்பொழுதே அதிக ஆசைப்பட்டாலும் ரஜினி அப்பொழுது அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை..
ஆனால் இயக்குனர் பி. வாசு படத்தை எடுத்தே தீருவேன் என கூறினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்திரமுகி 2 கதையை உருவாக்கி ராகவா லாரன்ஸிடம் சொல்ல அது ரொம்ப பிடித்து போகவே தற்பொழுது படமாக்கப்பட்டு வருகிறது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், லஷ்மி மேனன் மற்றும் பலர் நடிப்பு வருவதாக சொல்லப்படுகிறது.
படம் தற்பொழுது விறுவிறுப்பாக ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் திரையரங்குகளில் சந்திரமுகி 2 படம் வெளிவந்த சில வாரங்களிலேயே நெட்பிளிக்ஸ் OTT தளத்திலும் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன சந்திரமுகி இரண்டாவது படத்தை மிகப்பெரிய அளவிற்கு பிசினஸ் ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இவ்வளவு பெரிய அளவுக்கு பிசினஸ் செய்ய காரணம் சந்திரமுகி – 1 பிரம்மாண்ட வெற்றியை கருத்தில் கொண்டு சந்திரமுகி 2 பிரம்மாண்ட வெற்றி பெறும் என கருதி அதிக விலைக்கு விற்று உள்ளனர். ஆனால் இந்த படம் முதல் பாகம் அளவுக்கு வொர்க் அவுட் ஆகுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..