தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சிறந்த ஒரு நடிகராக இருக்கிறார் இவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வரை தமிழ் சினிமாவில் 65 திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் தற்போது தனது 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து விஜய் இணைந்துள்ளார் மற்றும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் இந்த படத்தை கூடிய விரைவில் முடித்து அடுத்த ஆண்டு முதலிலே வெளியிட படக்குழு மும்பரம் காட்டி வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படம் குறித்து சில புகைப்படங்கள் தகவல்கள் என வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் ஒரு காமெடி ஆக்சன் திரில்லர் போன்ற அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி வருவதாக கூறப்படுகின்றன. இதனை அடுத்து வாரிசு படத்தை எவ்வளவு சீக்ரெட் ஆக படபிடிப்பு நடத்தினாலும் சூட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சில கசிந்த வண்ணமே இருக்கின்றன. அதனால் கோபம் அடைந்த படக்குழு தற்போது வாரிசு படத்திற்கு புதிய கட்டளையிட்டது.
இயக்குனர் வம்சி வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இனி யாரும் செல்போன் மற்றும் கேட்ஜட்களை பயன்படுத்தக் கூடாது என கரராக கூறியுள்ளார். இது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் முதல் கொண்டு விஜய் வரை அனைவருக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.