பிக்பாஸ் கொடுத்த வாய்ப்பால் தனலட்சுமியை வச்சி செஞ்ச போட்டியாளர்கள்.! திமிரு கொஞ்சம் ஓவரா தான் இவருக்கு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மேலும் வாராவாரம் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்களும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ் மேட் அனைவரும் தனலட்சுமிக்கு அட்வைஸ் கொடுக்கும் படியான காட்சிகளிடம் பெற்றிருக்கிறது.

அதாவது இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து இரண்டு நபர்கள் கலந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டது அந்த வகையில் இந்த சீசனில் தனலட்சுமி அவர்கள் பங்கு பெற்றார். மேலும் இவருடைய போட்டித் திறமையை பார்த்து கடந்த வாரம் கமலஹாசன் அவர்கள் பாராட்டி இருந்தார்கள். மேலும  தொடர்ந்து போட்டியாளர்களும் இவருக்கு துணையாக இருந்து வந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களிடம் சற்று கோபமாக பேசி வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் ரசிகர்கள் இதன் காரணத்தினால் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என விரும்பி வருகிறார்கள். அதாவது இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் தனலட்சுமி எந்த குணங்களை மாற்றிக் கொண்டால் மேம்பட முடியும் என்பது பற்றி சக போட்டியாளர்கள் அட்வைஸ் கொடுக்கும்படியான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் அதில் ஹவுஸ் மேட் ஒவ்வொருவர் அவருக்கு பல்வேறு அறிவுறுகளை வழங்க அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய ரியாக்ஷனை மாற்றுகிறார் தனலட்சுமி இதுதான் இன்றைய எபிசோடில் நடைபெற இருக்கிறது. மேலும் தனலக்ஷ்மி தனக்கு அனைவரையும் மரியாதை கொடுக்க வேண்டும் என பேசி வருகிறார் அந்த வகையில் ராபர்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டு வந்தார் பிறகு ராபர்ட் மாஸ்டர் இனிமேல் உன்கிட்ட எதுவும் பேச மாட்டேன் என கூறிவிட்டார்.

இவ்வாறு தனக்கு மட்டும் மரியாதை வேண்டும் என கூறி வந்த தனலட்சுமி நேற்று நிவாஷ்னிடம் அசிமை பற்றி அவன் இவன் பேசியிருக்கிறார்.இந்த ப்ரோமோ வெளியான நிலையில் ரசிகர்கள் இதனை விமர்சித்து வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக இதனை கமல் அவர்கள் கேட்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள.