சங்கர் செய்த குளறுபடியால் சூப்பர் ஹிட் படத்தை நழுவ விட்ட உலகநாயகன்.! எந்த படம் தெரியுமா..

kamal
kamal

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் நடிகைகள் கூட ஏதோ ஒரு வகையில் நல்ல கதையை நழுவ விடுவார்கள். அந்தப் படம் பின் வேறு ஒரு நடிகர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடிப்பது காலம் காலமாக நடக்கிறது. அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனுக்கும் நடந்துள்ளது.

கமலஹாசன் சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டுக்கொண்டு நடித்து வெற்றியை கண்டவர். சினிமா அனுபவம் அவருக்கு அதிகம் இருப்பினும் அவரே ஒரு சில நல்ல கதைகளை தவற விட்டுள்ளார். அப்படித்தான் ஒரு தடவை கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சொன்ன ஜென்டில்மேன் கதையை தவற விட்டுள்ளார்.

1993ஆம் ஆண்டு கவுண்டமணி, அர்ஜுன், மதுபாலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியானது. படம் முழுக்க முழுக்க அக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படம் ஆக இருந்ததால் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது உலகநாயகன் கமலஹாசன் தானாம்.

ஜென்டில்மேன் படத்தின் கதையை முதலில் இயக்குனர் ஷங்கர் கமலிடம் தான் கூறினார். ஆனால் ஷங்கர் கூற ஆரம்பித்த கதை வேற மாதிரி இருந்ததாம் ஐயர் வீட்டு பையன் மூர்க்க தனமாக மாறுவதை பற்றி கதை இருந்ததாம். அதனால் தான் அந்த கதை கமலுக்கு பிடிக்கவில்லையாம். இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

கதையை ஷங்கர் சரியாக சொல்லியிருந்தால் நிச்சயம் ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக கமல் நடித்திருப்பார் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அர்ஜுனயும் சும்மா சொல்லிவிடக்கூடாது அந்த அப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு பிரமாதமாக நடித்து ஜென்டில்மேன் படத்தை ஒரு வெற்றி படமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.