சினிமா உலகில் பயணிக்கும் பிரபலங்கள் பலரும் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பான முறையில் தொடங்கி வெற்றிகளை குவிக்கின்றனர் அந்த வகையில் நடிகர் சிம்பு உடல் எடையை அதிரடியாக குறைத்து தனது எண்ணங்களை மாற்றி தற்போது சூப்பராக நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார்கள்.
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.. இந்த படத்திற்காக அதிரடியாக சிம்பு உடல்நலையெல்லாம் குறைத்து 18 வயது பையனாக மாறி தனது நடிப்பு திறமையை காட்டி இருந்தார் இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது வெந்து தெரிந்தது காடு படத்தின் வெற்றியை..
தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது கையில் பத்து தல மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது ஒரு பக்கம் மேலும் இவர் நடிக்கின்ற படங்கள் வெற்றி படங்களாக மாறுவதால் தற்போது தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.
கடைசியாக வெந்து தெரிந்த காடு படத்திற்காக 8 கோடி சம்பளம் வாங்கிய இவர் அடுத்தடுத்த படத்திற்காக பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி தற்போது 35 கோடி கிட்டத்தட்ட சம்பளம் கேட்பதாக ஒரு சில தகவல் வெளி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர்..
சில ரீமிக்ஸ் படங்களை சொல்லி அதில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது ஆனால் இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை என சிம்பு சொல்லியதாக ஒரு தகவல்கள் வெளி வருகின்றன.. இதனால் வெந்து தணிந்த காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கப் போகும் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.