தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதலில் ரஞ்சிதம் ரஞ்சிதமே பாடல், இரண்டாவதாக தி தளபதி பாடல், மற்றும் மூன்றாவதாக அம்மா பாடல் என்று மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் செய்த செயலால் வாரிசு படத்தின் தயாரிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு உள் நுழையும் போது காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டதால் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.
அதன் பிறகு வெற்றிகரமாக நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பின்னர் வந்ததுதான் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆப்பு வைத்தது அதாவது இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கைகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதை சரி கட்ட வேண்டும் என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சேதப்பட்ட இருக்கைகளை கணக்கெடுத்த பின் எவ்வளவு தொகை என்று தெரிவிக்க பட உள்ளதாக நேரு உள் விளையாட்டு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
படத்தின் பிரமோஷனில் பிஸியாக இருந்து வரும் வாரிசு பட குழுவினருக்கு இது ஒரு பெரும் நஷ்டமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படம் வெளி வருவதற்கு முன்பு ஏகப்பட்ட சிக்கலில் சிக்கிக்கொண்டு முழித்து வந்த நிலையில் அதையெல்லாம் எதிர்கொண்டு வருகிறது அதே போல தற்போது நிகழ்ந்துள்ளது இதை தயாரிப்பு நிறுவனம் எப்படி சரிகட்ட போவது என்று தெரியவில்லை.