கனா காணும் காலங்கள் சீரியல் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்.! அது யார் தெரியுமா.?

kana-kaanum-kalangal
kana-kaanum-kalangal

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற வரும் பிரபலம் ஒருவர் கனா காணும் காலங்கள் சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்கள் பெரிய ஹிட் அடித்து வருவது வழக்கம். அதுவும் ஒருசில சீரியல்கள் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத சீரியல்களாக இருந்து வரும். அந்த வகையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு கனா காணும் காலங்கள் இரண்டாவது சீசனை விஜய் டிவி சமீபகலங்களாக ஒளிபரப்பி வருகிறது.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் சீரியல் ஒன்று தான் கனா காணும் சீரியல் முதல் சீசன் பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பானது.  மேலும் கல்லூரி வாழ்க்கையை வைத்தும் ஒளிபரப்பாகி வந்தது.  ரசிகர்கள் இதனை மறுஒளிபரப்பு செய்யுமாறு தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இந்த தொடரின் புதிய சீசன் வெப் சீரியல் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் இர்பான், சங்கீதா என பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தி வருகிறார்கள். இந்த சீரியலின் தற்பொழுது பிரபல நடிகரும் குவித்து கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரை மான சந்தோஷ் பிரதாப் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது மேலும் அவர் நடித்துள்ள புரோமோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சந்தோஷ் பிரதாப் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தந்தது.  இவ்வாறு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து சில சீரியல்களிலும் நடப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.