வாத்தியா? பத்து தலையா? இயக்குனர் கூறிய சுவாரசியமான பதில்..

vaathi-pathu-thala
vaathi-pathu-thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.டி.ஆர் சிம்பு நடிப்பில் தற்பொழுது பத்து தல திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை கிருஷ்ணா இயக்கி வரும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், அணு சித்தாரா மற்றும் டீஜே அருணாச்சலம் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கிருஷ்ணா பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் தொகுப்பாளர் தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்துடன் சிலம்பரசனின் பத்து தல படம் மோதலாக ரசிகர்கள் பார்க்கிறார்களா? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது .அதில் அவர் கூறியதாவது, வாத்தி திரைப்படத்திற்கும் இந்த பத்து தல திரைப்படத்திற்கும் என்ன மோதல் இன்னும் வாரிசு துணிவு படம் முதல் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை.

இது நமக்கு தேவையில்லாத விவாதம் மோதல்கள் எல்லாம் வியாபார யுத்தியால் அணுகப்பட வேண்டியது பார்வையாளரா நம்ம படம் பார்த்தோமா நல்லா இருக்கா நல்லா இருந்தா படம் பார்க்கலாம் ரொம்ப நல்லா இருந்தா இன்னொரு முறை பார்க்கலாம் நானும் ஒரு பார்வையாளரா அதை தான் செய்வேன் எவ்வளவு வசூல் பண்ணுச்சுன்னு கவலைப்படுவதில்லை நமக்கு ஒன்னும் நடக்க போறது இல்ல.

அது சாமார்த்தியனுக்கு எதுவும் உதவ போவதில்லை அதே மாதிரி தான் வாத்தி திரைப்படம் நல்லா இருந்தா வாத்தி படம் நல்லா ஓட போகுது.. பத்து தல நல்லா இருந்தா பத்து தலை நல்லா ஓட போகுது அதனால நமக்குள்ள எதுக்கு மோதல்.. எனக் கூறியுள்ளார். இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களுக்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.