சமீபகாலமாக தாங்கள் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள், அதேபோல் தங்களது திறமைகளை மிக எளிதாக நிரூபிப்பதற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் டப்ஸ்மஸ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மிருணாளினி ரவி, இவர் அழகான முக பாவனைகளை காட்டி வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரபலமடைந்தவர், இவரின் வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதன் மூலம் சமூக வலைதளத்தில் அதிக லைக்ஸ் பெற்றார்.
மிகவும் பிரபலமடைந்த இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதனை தொடர்ந்து அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகிய ‘சாம்பியன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பின்பு தெலுங்கில் வால்மீகி என்ற திரைப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார், இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய ஜிகர்தாண்டா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்..
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் அவர்கள் விழிப்புணர்வு வீடியோ, ஜிம் ஒர்க் அவுட் செய்வது, சமைப்பது, போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது என வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் மிருனாளினி போட்டோசூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைபடத்தில் மாடர்னாக உடை அணிந்துள்ளார்கள்.
இதோ புகைப்படம்.