இவ்வளவு நாள் நாம் கேட்டது இவர்கள் குரல் தான்!! தமிழ் சினிமாவில் கலக்கும் டப்பிங் கலைஞர்கள்…

revathi
revathi

dubbing artist: சினிமாவில் நாம் பார்க்கின்ற நடிகர், நடிகைகளின் மேல் நமக்கு ஓர் ஈர்ப்பு வருவதற்கான காரணம் அவர்களுடைய நடிப்பு மற்றும் அழகு மட்டுமின்றி அவர்களுடைய குரலும் ஓர் முக்கியத்துவம் வைக்கின்றது. பெரும்பாலான நடிகை, நடிகர்கள் தனது சொந்த குரலில் பேசுவதில்லை. இவர்களுக்காக டப்பிங் செய்கின்ற கலைஞர்களைப் பற்றி பார்ப்போம்.

சிறந்த நடிகராக நமக்கு பழக்கப்பட்ட சியான் விக்ரம் அவர்கள் நடிகர் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் போன்ற பிரபலங்களுக்கு டப்பிங் செய்து உள்ளார்.
தல அஜித் நடித்த முதல் படமான அமராவதி என்ற படத்தில் அஜித்தின் குரலுக்கு பதிலாக விக்ரம் டப்பிங் செய்து உள்ளார். காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு விக்ரம்தான் டப்பிங் செய்துள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், விஐபி, பூச்சூடவா என்ற படத்தில் அப்பாஸ்க்கு விக்ரம்தான் டப்பிங் செய்து உள்ளார். காந்தி படத்தில் பென்கிங்ஸ்லிக்கு சின்ன வயது காந்திக்கும் பெரிய வயது காந்திக்கும் தனது அருமையான குரலில் வித்தியாசம் காட்டியுள்ளார். நடிகை ரேவதியும் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்து உள்ளார்.

ஆசை படத்தில் சுப்புலட்சுமிக்கு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தபு விற்கும் மின்சார கனவு படத்தில் கஜோலுக்கும் நடிகை ரேவதி தான் டப்பிங் செய்துள்ளார். ஆதிபகவான், வேட்டைக்காரன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ரவிஷங்கர் பல வில்லன் ஹீரோக்களுக்கு டப்பிங் செய்துள்ளார். டப்பிங்காக இவர் 15க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.

தில், கில்லி, பகவதி, குரு ஆகிய படத்தில் ஆஷிஷ் வித்யாருடைய நாம் கேட்ட குரல் இவருடையதுதான். பழைய தமிழ் படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி சாயாஜி ஷிண்டே இருவருக்கும் வெவ்வேறு குரல்களில் டப்பிங் செய்துள்ளார்.

அடுத்ததாக நடிகை சரிதா இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி நடிகை நதியா விற்கும் காதலன், பாட்ஷா போன்ற படங்கள் நடிகை நக்மா விற்கும், காதல் தேசம் சினேகிதியே படங்களில் தபுவிற்கும் டப்பிங் செய்துள்ளார். பாடகியாக உள்ள சுஜித்ரா கொஞ்சம் போல்டாக உள்ள கதாநாயகிகளுக்கும் நெகட்டிவ் சீன் உள்ள கதாநாயகிகளுக்கும் டப்பிங் செய்துள்ளார். மங்காத்தாவில் லட்சுமி மேனனுக்கும், கந்தசாமியின் ஸ்ரேயாவுக்கும், நான் சிகப்பு மனிதன் இனியாவிற்கு சுசித்ரா தான் டப்பிங் செய்துள்ளார்.

அடுத்ததாக சபிதா ரெட்டி இவர் சிம்ரன், ஜோதிகா, சினேகா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்காக டப்பிங் செய்துள்ளார் டப்பிங் செய்துள்ளார்.இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் செய்து உள்ளார். முரளிகுமார் இவர் அதிகமாக சீரியலில் நடித்து உள்ளார். இவர் முதன்முதலாக ஊமை விழிகளில் அருண் பாண்டிக்கு டப்பிங் செய்துள்ளார். நாட்டாமை படத்தில் வில்லனாக நடித்த பொன்னம்பலத்திற்கு டப்பிங் செய்தவர் முரளிகுமார். மேலும் இவர் அதிகமாக ஹாலிவுட் படத்தில் டப்பிங் செய்துள்ளார்.