மொத்தத்தையும் இழந்த கமல்… பணம் இல்லாததால் முடங்கி கிடக்கும் மூன்று பிரமாண்ட தமிழ் திரைப்படங்கள்.! ஒவ்வொன்றும் வேற லெவல்

dropped tamil movie
dropped tamil movie

Dropped 3 tamil movie list : சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் பரவாயில்லை ஆனால் நிதி நெருக்கடி வந்தாலே படம் முடங்கி போய் கிடந்து விடும் அதுமட்டுமில்லாமல் ஒரு சில காரணங்களால் படத்தைப் பாதியிலேயே கைவிட்டு விடுவார்கள் அந்த வகையில் டாப் நடிகர்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு பின்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட திரைப்படங்கள் என்ன என்று இங்கே காணலாம்.

கெட்டவன் : 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் சிம்பு தானே இயக்கி தானே நடித்து வெளியிட இருந்த திரைப்படம் கெட்டவன். இந்த திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரமாக நமிதா, சந்தானம், தருண் கோபி, பிரேம்ஜி அமரன் என பல நடிக்க இருந்தார்கள். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் இன்றும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது ஆனால் பல காரணங்களால் இந்தத் திரைப்படம் படப்பிடிப்பிற்கு நகராமலேயே நின்றுவிட்டது.

kettavan
kettavan
யோகன் அத்தியாயம் ஒன்று:

கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய்யை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் யோகன் அத்தியாயம் ஒன்று இந்த திரைப்படத்துக்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம்  அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் முடக்கப்பட்டது ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் இப்பொழுது கூட என்னிடம் ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கிறது விஜய் ஓகே சொன்னால் படத்தை எடுக்க நான் தயாராக இருக்கிறேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yogan Adhyayam Ondru
Yogan Adhyayam Ondru
கமலஹாசனின் மருதநாயகம் : 

கமலஹாசன் நடிப்பில் மிரட்டலாக  உருவாக இருந்த திரைப்படத்தை 23 வருடத்திற்கு முன்பே உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இங்கிலாந்து ராணியான இரண்டாவது எலிசபெத்தை அழைத்து வந்து படத்திற்கு பூஜை போட்டார். அதுமட்டுமில்லாமல் ஆக்ராவில் இருந்து அரிய வகை கழுகை வரவைத்து படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டது. மருதநாயகம் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் கமலஹாசன் அனைத்து சொத்துகளையும் இழப்பதற்கு தயாரானார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்பட கிட்டத்தட்ட பாதி முடிந்து நிலையில் படத்தை தொடர்வதற்கு பணம் இல்லாமல் நிறுத்தப்பட்டது கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கான தயாரிப்பாளர் கிடைத்தவுடன் படத்தை தொடர்வார் என ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

maruthanayagam
maruthanayagam