பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் இயக்கிய திரைப்படம் திரௌபதி , இந்த திரைப்படம் நாடகக் காதலை மையப்படுத்தி கதை உருவாகியது.. இந்த திரைப்படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவு கிடைத்தாலும் மற்றொரு பக்கம் மிகப்பெரிய எதிர்ப்பு நிலவியது.
இந்தநிலையில் இந்த திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழகம் முழுக்க 330 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அஜித்தின் மைத்துனர் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்திருந்தார். திரவுபதி திரைப்படத்தில் சிலம்பம் சுற்றும் பயிற்சியாளராக அவர் நடித்திருந்தார்.
இதற்கு முன் ரிச்சர்ட் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இந்த திரைப்படம் தான் இவரை பற்றி பேசி உள்ளது. திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பல திரையரங்குகள் அதிகரித்தது.
இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 15 கோடி ரூபாய் வசூலை பெற்றது. ஆனால் இந்த திரைப்படம் வெறும் 50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த வசூலை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் வாயைப் பிளந்து பார்த்தது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி கடவுள் பெயரை வைத்ததால் தான் இவ்வளவு பிரச்சனை, என்னுடைய அடுத்த திரைப்படமும் கடவுள் பெயர் தான் இருக்கும் என அண்மையில் அறிவித்தார்.
இந்த நிலையில் தற்பொழுது இதே கூட்டணியில் தான் அடுத்த படத்தில் இணையும் என ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டரில் தன்னுடைய அடுத்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் ரிச்சர்ட் ரிஷியுடன் தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் விரைவில் ஒரு நல்ல நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் மோகன்ஜி.
Uploading⏳⏳⏳ my next #SurgicalSrtike project with Mr @richardrishi ???
Title will be revealed in a good day soon ?.. pic.twitter.com/RnhNiHs8rT— Mohan G ?? (@mohandreamer) March 17, 2020