தேசிய விருது பெற்ற முக்கிய நடிகரை தட்டி தூக்கிய திரௌபதி இயக்குனர்.! இனிதான் ருத்ரதாண்டவம் ஆரம்பம்.!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியவர் தான் மோகன் ஜி இவர் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியாகிய திரைப்படம்தான் திரவுபதி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

இந்த திரைப்படத்தை பெரிய நடிகர்கள் யாரும் கிடையாது பெரிய இயக்குனர்கள் அனுபவமிக்க இயக்குனர்கள் கலைஞர்கள் என யாரும் கிடையாது, ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்த திரைப்படம்.

மேலும் திரவுபதி திரைப் படத்தில் ஹீரோவாக பேபி ஷாலினியின் அண்ணனும் அஜித்தின் மைத்துனரும் மான ரிச்சர்ட் நடித்திருந்தார்,  இவர் தமிழ் சினிமாவில் அஞ்சலி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு கிரிவலம் நாளைய தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் இவர்கள் அஜித்தின் மைத்துனராக இருந்தாலும் சினிமாவில் திறமை இருந்தால் தான் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும். சினிமாவில் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும் என அனைவருக்கும் தெரியும்..

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு அந்தமான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வில்லை பின்பு நான்கு வருடங்கள் கழித்து மோகன் ஜி இயக்கிய திரவுபதி என்ற திரைப்படத்தில் நடித்து மாஸ் என்று மீண்டும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திரவ்பதி திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்க இருக்கிறார்கள் அந்த திரைப்படத்திற்கு ருத்ரதாண்டவம் என பெயர் வைத்துள்ளார் ஆயுத பூஜை அன்று   படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வந்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் இயக்குனர் மோகன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே சீரியல் நடிகை தர்ஷ குப்தா கமிட்டாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தர்ஷ குப்தா இணையதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே ருத்ரதாண்டவம் தாண்டவமாடும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.