இரண்டு படம் எடுத்துட்டு இது பண்ணுகிற அலப்பறை தாங்க முடியல என்ற ரசிகரின் பதிவிற்கு தரமான பதிலடி கொடுத்த திரவுபதி இயக்குனர் மோகன் ஜி.!

director-mohan-g-tamil360newz
director-mohan-g-tamil360newz

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார், திரௌபதி படத்திற்கு பல விமர்சனங்கள், தடைகள் வந்தாலும் அந்த தடைகளை அனைத்தையும் உடைத்தெறிந்து படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது.

பல பிரபலங்கள் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டே பல விஷயங்கள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தன்னை பாராட்டும் ரசிகர்களுக்கு நன்றியையும் தன்னை விமர்சிக்கும் ரசிகர்களுக்கு தக்க பதிலடியும் உடனே  கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு ரசிகர் இரண்டு படம் எடுத்துவிட்டு இவன் தொல்லை தாங்க முடியலை என்பது போல் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதற்கு திரௌபதி இயக்குனர் சரியான பதிலை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில் கூறியதாவது, படம் எடுத்தா பேச கூடாதாடா.. எடுக்குறதுக்கு முன்னாடியும் இப்படிதான்டா பேசுனேன்.. வன்னியர் ஒருத்தன் வளர்ந்தா உங்களுக்கு எரிய தான்டா செய்யும்.. இன்னும் பலர் திரைத்துறையில் வளர தான்டா போறாங்க.. வயிறு எரிந்து கதறுங்கடா.. என பதிலடி கொடுத்துள்ளார்.