குறைந்துக் கொண்டே போகும் ரஜினி மார்க்கெட் – கடைசி 5 படங்களுக்காக் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

rajini
rajini

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போ ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இருப்பின்னும் இவர் கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தன இதனால் ரஜினியின் மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக கீழ இறங்குகின்றன இதை உணர்ந்து கொண்ட ரஜினி தனது கடைசி ஐந்து படங்களுக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்கிறார். அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்.

1. பேட்ட : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் கவர்ந்து இழுத்தது இந்த படம் வெற்றி பெற்றது இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 110 கோடி சம்பளம் வாங்கினார்.

2. தர்பார்  : ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக உருவாக்கியது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் இந்த படம் சுமாராகத்தான் ஓடியது இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் வாங்கினார்.

3. அண்ணாத்த : ரஜினி கிராமத்து கதைகள் நடிக்க ஆசை இருந்தது அதனால் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து இந்த படத்தில் நடித்தார் இந்த படம் செண்டிமெண்ட் நிறைந்த ஒரு படமாக இருந்தது இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் பேட்டை நடத்தியது.  இந்த படத்திற்காக 100 கோடி சம்பளமாக வாங்கினார்.

4. ஜெயிலர் : நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது இதில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த படத்திற்காக அவர் சுமார் 80 கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

5. தலைவர் 170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்தது அடுத்ததாக தனது 170 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக அவர் 75 கோடி சம்பளமாக வாங்குவார் என கூறப்படுகிறது.