இயக்குனர் பாலா தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார் இவர் இயக்கும் திரைப்படங்கள் எப்பொழுதுமே சர்ச்சையில் சிக்காது ஏனென்றால் யாரும் எடுக்காத ஒரு கதையை படமாக எடுப்பது தான் அவரது ஸ்பெஷலும் கூட.. இவர் திரையுலகில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்து இருக்கிறார்.
ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது மேலும் பல விருதுகளையும் தட்டி தூக்கி உள்ளது. இயக்குனர் பாலா இதுவரை சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், நந்தா, பரதேசி, நாச்சியார் என சொல்லிக்கொண்டே போகலாம்.. இப்படி ஓடிக் கொண்டிருந்த பாலா மீண்டும் ஒரு முறை சூர்யாவுடன் கைகோர்த்து வணங்கான் என்னும் படத்தை எடுத்து வந்தார்.
வணங்கான் படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து பாலாவுக்கும் – சூர்யாவுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது அது சமூக வலைதள பக்கங்களில் பெரிதாகவும் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கு பாலாவுக்கும் பிரச்சினை பெரிதாக வெடிக்க.. சூர்யா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான 2d தயாரிப்பு நிறுவனம் வணங்கான் படத்திலிருந்து விலகிக் கொண்டது.
அதுவும் அதிகாரப்பூர்வமாகவும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பாலா வணங்கான் திரைப்படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் இயக்குனர் பாலா.. அந்த வகையில் விஷால் அல்லது ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருவருமே இணைந்து பாலாவின் படமான அவன் இவன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
பாலா புதிய படத்தில் நடிக்க ஆர்யா தயங்க மாட்டார் ஆனால் விஷால் அப்படி கிடையாது அவன் இவன் திரைப்படத்தில் நடிக்கவே ரொம்ப கஷ்டப்பட்டார். இன்னொரு படம் பாலாவுடன் பண்ண விஷால் தயங்குவார் என கூறப்படுகிறது. அதனால் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் ஆர்யா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பும் இன்னும் வெகு சில தினங்களிலேயே வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல இந்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.