தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடிப்பு வருகிறார். இப்படி வெற்றி படங்களை கொடுத்து திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வருகிறார்.
இவரை வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் விஜய் படத்தில் நடிக்கவும் பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுவது வழக்கம்.. குறிப்பாக டாப் நடிகைகளே ரஜினி கமலை விட விஜய் படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அது குறித்து பார்ப்போம்..
விஜயின் பிஆர்ஓவாக பணியாற்றி பின் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் பீடி செல்வகுமார் இவர் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அவர் ஸ்ரீதேவி இவர் ஆரம்பத்தில் ரஜினி, கமல் என பல்வேறு டாப் ஹீரோகளின் படங்களில் நடித்திருந்தாலும்..
ஹிந்தி பக்கம் சென்ற பிறகு அங்கு மிகப் பெரிய பிரபலமாகிவிட்டார் பின் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் வளர்ந்து ஹீரோயின் போல் ஆனாதால் ஸ்ரீதேவி நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார். மேலும் தன்னை நம்பி வரும் அனைவரிடமும் இனி நடிக்க போவதில்லை என சொல்லி வந்தார்.
ஒரு தடவை ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்கு சென்றதாம் ஆனால் ரஜினி படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம் இந்த நிலையில் தான் பிடி செல்வகுமார் ஸ்ரீதேவியை சந்தித்து புலி படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டாராம். படத்தில் விஜய் மற்ற பிரபலங்கள் இருப்பதாக கூறியுள்ளார். உடனே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தாராம் இதனை பிடி செல்வகுமார் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்.