தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வருபவர் தான் நடிகை மீனா இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் கணவர் வித்யாசாகரின் திடீர் இழப்பு ரசிகர்களுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் அனைவருமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நடிகை மீனா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு தான் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார் இவர் இந்த திருமணத்துக்கு பிறகு நைனிகா என்ற ஒரு மகளை பெற்றெடுத்துள்ளார் இந்நிலையில் நடிகை மீனாவின் கணவருக்கு சமீபத்தில் 48 வயது ஆகியுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பல்வேறு விதத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் கடந்த 28ஆம் தேதி அவர் இயற்கை எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடைய கணவரின் மறைவை பற்றி மீனா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய கணவர் இறப்பால் நான் பல்வேறு மன கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளேன் அந்த வகையில் பத்திரிகை நண்பர்கள் அனைவரும் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு எங்களுடைய தனிப்பட்ட விஷயத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
அந்த வகையில் நீங்கள் எந்த ஒரு தவறான செய்திகளையும் இணையத்தில் பரப்ப வேண்டாம் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன் அது மட்டும் இல்லாமல் இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் எனக்கு உதவியாக இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பது மட்டுமில்லாமல் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் தமிழக முதல்வர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகை மீனா கூறி உள்ளார்.
