சூர்யா சாரை ஒரு நடிகனாக மட்டும் பார்க்கல.. அதுக்கும் மேல.. இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சு..!

surya
surya

அண்மைக்காலமாக பிறமொழி நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் என்ட்ரியாகி நல்ல நல்ல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து பிரபலம் அடைகின்றனர். அந்த வகையில் மாளவிகா மோகனன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர்களை தொடர்ந்து இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் இருந்து தற்போது தமிழ் சினிமா பக்கம் படை எடுத்துள்ளார்.

தொடர்ந்து நல்ல நல்ல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் முதலாவதாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து வணங்கான்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலாஇயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியை ரொம்ப அழகாக காண்பிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இயக்குனர் பாலா இதுவரை தனது படங்களில் நடித்த நடிகர் நடிகைகளை ரொம்ப அழுக்காக தான் காட்டு இருப்பார். முதல் முறையாக தனது பட நடிகை கீர்த்தி ஷெட்டி மட்டும் ரொம்ப அழகாக காட்ட இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இந்த படம் வெற்றி படமாக மாறும் பட்சத்தில் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகரின் படங்களின் பட வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா உலகில் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் ரசிகர்களையும் தக்கவைத்துக்கொள்ள தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி ஒரு தடவை ரசிகரின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார் அதில் ஒருவர் சூர்யாவை பற்றி கேட்டு உள்ளார். அதற்கு கீர்த்தி ஷெட்டி நான் மதிக்கும் மரியாதைக்குரியவர் ஒருவர் சூர்யா என்று குறிப்பிட்டுள்ளார் இது சூர்யா ரசிகர்களை தற்போது கொண்டாட வைத்துள்ளது.