நீ எல்லாம் காமெடியன்னு வெளியே சொல்லாத.. சூரியிடம் மல்லுக்கட்டிய விஜய்சேதுபதி.. வெளிவந்த சுவாரஸ்சிய தகவல்

vijay-sethupathy
vijay-sethupathy

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து  பின் தனது திறமையை வளர்த்துக்கொண்டு இப்போ ஹீரோவாகவும், வில்லனாகவும் கொடிக்கட்டி வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும்..

இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதால் சம்பளத்தை உயர்த்தி நடித்து வருகிறார். இப்போ ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் இரண்டு படங்களிலும் தமிழில் ஒரு சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் இவர் நடிப்பில் தற்போது பெரிய அளவில் எதிர்பார்க்கக் கூடிய திரைப்படம் தான் விடுதலை.

இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார் படம் முழுக்க முழுக்க போலீஸ்கார்களும், போராட்டக்காரர்களுக்கும் நடக்கும்.. ஒரு பிரச்சினையை தான் விவரமாக சொல்லி உள்ளது அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்பட்டுள்ளது படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூரி, கௌதம் வாசுதேவ் மேனன்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடத்தியது அப்பொழுது நடிகர் சூரி. விஜய் சேதுபதி பற்றி பேசியது என்னவென்றால்.. நான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த முடித்ததும் விஜய் சேதுபதி இடம் காமெடி நன்றாக இருக்கிறதா என கேட்டேன்..

viduthalai
viduthalai

அப்பொழுது விஜய் சேதுபதி நீ முதலில் உன்னை ஒரு காமெடியன்னு முடிவு பண்ணிடாதே காமெடி நல்லாத் தான் இருக்கு ஆனா அதை தாண்டி நீ ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட் உன்னால எந்த கதாபாத்திரத்தையும் நல்லா பண்ண முடியும் அதனால் அதற்கு முயற்சி செய்ய என கூறினார். அவர் சொன்னது போலவே விடுதலை படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.