தமிழ்சினிமாவில் பலவிதமான படங்கள் ஆண்டுதோறும் வெளிவந்து வெற்றி தோல்வி அடைகிறது ஆனால் ஒரு சில படங்கள் எப்போது வெளிவந்தாலும் ஹிட்டடிக்கும் அந்த வகையில் த்ரில்லர் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு உண்டு என பல பிரபலங்கள் கூறி நாம் கேட்டுள்ளோம்.அந்த வகையில் சில படங்கள் இன்றளவும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன படங்களாக உள்ளன அவற்றை தற்போது பட்டியலிட்டுள்ளோம்.
1. அருண் விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குற்றம் 23. இப்படம் முழுக்க முழுக்க திரில்லர் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இப்படத்தில் அருன்விஜய் மகிமா நம்பியார் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் கதை 23 குரோமோசோம்கள் உருவாகும் பிறப்பை ஆர்டிபிசியல் ஆக உருவாக்கும் கதையே இப்படத்தின் கதை. படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு திரில்லர் கொண்டுள்ளது இப்படம்.
2. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன் இப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகுது என்பதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் யூகிக்க முடியாத அளவிற்கு சஸ்பென்சாக கொண்டுசென்ற படம் தனி ஒருவன். இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் வசூல் செய்தது 105 கோடி என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமாவில் இது ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையில் தற்போதுவரை பேசப்பட்டு வருகிறது.
3. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் நடிப்பில் 2011 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யுத்தம் செய் இப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. அவருக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மணி நேரம் எப்படி ஓடியது என்பது தெரியாத அளவிற்கு படத்தை படத்தை சிறப்பாக நகர்த்தி உள்ளனர் படக்குழுவினர்.
4. இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துருவங்கள் பதினாறு. இப்படத்தில் பிரகாஷ் விஜயராகவன் அஸ்வின்குமார் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர் ஏற்படும் யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது 2016ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
5. அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த படம் விசாரணை இந்த திரைப்படம் திரையரங்குக்கு வெளிவருவதற்கு முன்பாகவே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தை தனுஷ் அவர்கள் தயாரித்திருந்தார் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் பட்ஜெட் 1.5 கோடி வசூல் செய்தது 13 கோடி என்பது குறிபிடத்தக்கது இப்படத்தின் கதை நான்கு கைதிகளை போலீஸ் விசாரணையின் மூலம் என்கவுண்டரில் கொள்வது போன்ற உண்மையான கதையை மையமாக எடுக்கப்பட்டது.