தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் வளம் வந்தவர்தான் கங்கை அமரன் இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த இயக்குனரும் கூட அந்த வகையில் இவர் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது கங்கைஅமரன் இசைஞானி இளையராஜாவின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் பல்வேறு சினிமா பாடல்கள் மற்றும் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரன் பாஜக கட்சியின் ஆதரவாளராக இருப்பது மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஆனால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கங்கை அமரன் முதன்முதலாக கோழி கூவுது என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பிறகு ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் அதன்பிறகு தென்மாங்கு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்திலும் மிகப்பெரிய வெற்றியைக் கண்டார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை டூ பீஸில் காட்டிய திரைப்படம் என்றால் அது தென்மாங்கு பாட்டுக்காரன் திரைப்படம் தான் இதில் ராமராஜன் அவர்கள் ஒரு பனியன் டவுசர் மட்டும் போட்டுக்கொண்டு படம் முழுக்க நடித்திருப்பார்.
ஆனால் இப்போ உள்ள நடிகர்களை அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லுங்கள் பார்க்கும் ஒருவரும் நடிக்க மாட்டார்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் இதில் கமல் மட்டும்தான் துணிந்த நடிப்பார் என அவர் கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.