இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை எனும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியை வைத்து திரௌபதி என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் என்பவர் நடித்திருந்தார்.
மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மோகன் ஜி மீண்டும் ரிச்சர்ட் ரிஷியை வைத்து ருத்ர தாண்டவம் என்னும் ஒரு ஆக்சன் படத்தை எடுத்து வெளியிட்டார் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவனை வைத்து பாகசுவரன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த படமும் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்து உரைக்கும் என கூறப்படுகிறது இப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு படமாக எடுத்து வெற்றி கண்டு வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஷீலா ராஜ்குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது. சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் நீங்கள் திரௌபதி படத்தில் நடித்தது பற்றி எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அவர் திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு மாதிரி இருக்கு இயக்குனர் தனக்கு முழு கதையையும் சொல்லவில்லை இயக்குனர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது இதை எல்லாம் எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருந்து இருப்பேன் திரௌபதி எனக்கு பெரிய ஒரு பாடமாக நான் பார்க்கிறேன் என கூறி அதிர வைத்தார்.