கனவு கூட காணாதீங்க.. அஜித்துடன் அப்படி நடிக்கவே மாட்டேன் – நிதி அகர்வால் பேச்சு

Ajith
Ajith

Ajith : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை நிதி அகர்வால் இவர் முன்னா மைக்கேல் என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு இவர் நடித்த மிஸ்டர் மஞ்சு, ஸ்மார்ட் ஷங்கர்  போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது சினிமாவில் எவ்வளவு நடிப்பு திறமையை காட்டினாரோ..

அதிக அளவுக்கு கிளாமர்  காட்டி அடித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். தமிழில் சுசீந்திரனின் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து அறிமுகமானார் ஆனால் படம் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை அதனை தொடர்ந்து இவர் நடித்த பூமி, கலக தலைவன் போன்ற படங்கள் சுமாராக ஓடின.

இதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்கள் கைகோர்த்து தற்போது நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நடிகை நிதி அகர்வால் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அஜித்தின் புகைப்படத்தை கையில் எடுத்து அஜித்தை பற்றி சில வார்த்தைகள் பேசிய உள்ளார்

அவர் சொன்னது என்னவென்றால்.. எனக்கு அஜித் சாருடன் தங்கச்சி, அக்கா வேடங்களில் நடிக்க விருப்பமில்லை அவருடன் ஹீரோயின்னாக நடிக்க வேண்டும் அதுதான் எனது ஆசை எனக் கூறினார் மேலும் பேசி அவர் அஜித் சார் ரொம்ப ஹேண்ட்ஸம், நல்ல தோற்றம் கொண்டவர்.

அஜித் சார் நடித்த மங்காத்தா படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய பர்ஃபார்மன்ஸ் அதில் சூப்பராக இருந்தது என அஜித்தை பற்றி நடிகை நிதி அகர்வால் புகழ்ந்து பேசிய உள்ளார் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.