நான் குடிக்களான எவனும் குடிக்ககூடாது!! V J அஞ்சனாவின் கணவர் கயல் நடிகர் வெளியிட்ட வீடியோ இதோ!!

V J Anjana tik tok video: அஞ்சனா ரங்கன் இவர் VJ அஞ்சனா என்று அழைக்கப்படுவார். இவர் தொகுப்பாளினியாக பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இவர் தொகுத்து வழங்கிய சில நிகழ்ச்சிகள்  ப்ரீய விடு, வாழ்த்துக்கள், பாட்டு டாட் காம், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாட்டு புதுசு மற்றும் நீங்களும் நாங்களும் என்ற ஷோ மூலம் பிரபலமானார்.

இவர் சிறந்த தொகுப்பாளினியாக தன்னை வளர்த்துக்கொண்டு ரியாலிட்டி ஷோ, அவார்ட் பங்க்ஷன், பிரபலங்கள் இன்டர்வியூ, பாடல் வெளியீட்டு விழா போன்ற அனைத்தையும் தொகுத்து வழங்கினார. பிறகு இவர் சந்திரமௌலி பி சுப்பிரமணியன் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ருத்ராக்ஸ் எனும் ஆண் குழந்தையும் உள்ளது.இவர் குழந்தை பிறந்த சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சி தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ், மற்றும் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

தற்போது அஞ்சனாவின் கணவர் தனது மனைவி செய்த வடிவேலு காமெடி டிக் டாக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றார் போல் உள்ளதால் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ