சித்தப்பாவை.. விருமன் படத்தில் நடிக்க வைக்காதீங்க.? இயக்குனருக்கு கட்டளை போட்ட நடிகர் கார்த்தி.

karthi
karthi

சூர்யாவின் தம்பி கார்த்தி தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெற்றியை அள்ளி வருகிறார். தற்பொழுது கூட முத்தையாவுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து விருமன் படத்தில் நடித்தார் இந்த படமும் கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் இதுவரை மட்டுமே சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருமன் படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரன், கருணாஸ், சூரி, மைனா நந்தினி, மனோஜ், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்திருந்தனர். மூவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர்.

குறிப்பாக கருணாஸ் கொஞ்சம் சீன்களில் வந்து போனாலும் அவரது கதாபாத்திரம் மிரட்டும் வகைகள் இருந்தது ஆனால் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒருவர் என சொல்லப்படுகிறது. இயக்குனர் முத்தையா முதலில் கருணாஸ் கதாபாத்திரத்தில் சரவணனை நடிக்க வைக்க தான் பிளான் பண்ணினாராம்.

கார்த்தி உடனே விருமன் படத்தில் சரவணன் அவர்கள் வேண்டாம் என கூறிவிட்டாராம் பின்னணியில் என்ன தகவல் என்று பார்த்தால் சரவணன் இந்த படத்தில் நடித்தால் பருத்திவீரன் சாயல் வந்துவிடும் என நினைத்து தான் கார்த்தி வேண்டாம் என சொல்லிவிட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் சரவணன் மீண்டும் கார்த்தி உடன் விருமன் படத்தில் கைகோர்த்து நடித்திருந்தால் அவரது சினிமா மார்க்கெட் மீண்டும் உச்சத்தை எட்டி இருக்கும் ஆனால் அது நடக்காமல் போனது தற்பொழுது ரசிகர்களை சற்று வருத்தம் அடைய செய்துள்ளது. செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.