இனிமேல் என்னை அப்படி கூப்பிடாதீர்கள் – ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட அஜீத்.!

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இப்பொழுது இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் முழுவதும் உள்ளதால் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் துணிவு திரைப்படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாக கூறினார்.

அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர்கள் வீரா, யோகி பாபு, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து அஜித் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ப்ரோமோ பாடல் போன்றவற்றை வெளியிட சென்னையில் ஒரு பிரபல ஸ்டுடியோவில் படபிடிப்பு நடந்துள்ளது அதில் அஜித் கலந்து கொண்டார்.

இதை அறிந்த ரசிகர்கள் அங்கு வந்துள்ளனர் அஜித்தை பார்த்து உங்களை பார்க்கத்தான் வந்துள்ளோம் சார் எனக்கூறி உள்ளனர் அதற்கு அஜித் என்னை ஏன் சார் என்று கூப்பிடுகிறீர்கள்  அண்ணா என்று கூப்பிடுங்கள் என ரசிகர்களிடம் சொன்னாராம். இந்த தகவல்  இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.