வதந்திகளை நம்ப வேண்டாம்..? என்னுடைய கனவு படம் பற்றி சூர்யாவிடம் சொல்லிவிட்டேன்.! பா. ரஞ்சித் பேட்டி.

pa-ranjith
pa-ranjith

அண்மைக்காலமாக சிறந்த இயக்குனர்கள் பலரும் நல்ல படங்களை கொடுத்து ஓடுகின்றனர் அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித். இயக்கிய  படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் வரிசையில் அமைகின்றன. இயக்குனர் பா ரஞ்சித் அட்டகத்தி படத்தை இயக்கியதன் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக மாறியது அதனைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித்  மெட்ராஸ்,  கபாலி, காலா ஆகிய படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக மாறின இதனால் இயக்குனர் பா ரஞ்சித்தின் சினிமா பயணம் மேலும் பிரபலமடைந்தது. சினிமா உலகில் வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக்கொண்டிருக்கும் பா.ரஞ்சித்.

கடைசியாக இயக்கிய திரைப்படம் தான் நட்சத்திரம் நகர்கிறது.  இந்த படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக நடிகர் விக்ரமுடன் பா ரஞ்சித் கைகோர்த்து உள்ளார். அந்த படத்திற்கான பூஜை எல்லாம் அண்மையில் போடப்பட்டு அந்த புகைப்படங்கள் வைரலாகின.

இப்படி இருக்கின்ற நிலையில் பா ரஞ்சித்தின் கனவு திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது அவரது கனவு படமான ஜெர்மன் படம் சர்வதேச கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகும் என ஒரு தகவல் வெளியாகியது ஆனால் அதை பா. ரஞ்சித் முற்றிலும் மறுத்துள்ளார்.

மேலும் தனது கனவு படம் குறித்து நடிகர் சூர்யாவுடன் தான் சொல்லி உள்ளதாகவும், இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மிகப்பெரிய அளவில் ஜெர்மன் படத்தை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.