பாகிஸ்தான் அணியில் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்தவர் முகமது அமீர் இவர் திடீரென 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தும் உள்ளார் அதாவது அவருக்கு சரியான மரியாதை கொடுப்பது கிடையாது மற்றும் அதிக அளவில் பிரஷரை கொடுத்ததாக கூறினார்.
29 வயதாகும் அமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என கிரிக்கெட் ஆலோசகராகவும் பாகிஸ்தான் முன்னாள் அணியின் பந்து வீச்சாளரும் கேப்டனாகவும் இருந்த வாசிம் அக்ரம் தற்பொழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆனால் தற்போது முகமது அமீர் தனது மனைவியுடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்து உள்ளார்.
மேலும் அங்கு 6 அல்லது 7 வருடங்களுக்கு அவர் உள்ளூர் கிரிக்கெட் விளையாட போவதாகவும் கூறியுள்ளார் இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரரான முஹமுத் IPL போட்டியில் விளையாண்டது குறிப்பிடத்தக்கது அதுபோல இவரும் விளையாட இருக்கிறது என பார்க்கப்படுகிறது.
ஆனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான வாசிம் அக்ரம் முகமது ஆமிர் குறித்து பேசியுள்ளார் அவர் குறிப்பிட்டுள்ளது நான் உண்மையில் ரொம்ப ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் அமீர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் குறிப்பாகT20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த வீரராக விளங்குகிறார் அவர் பாகிஸ்தான் உலக இருபது20 அணியில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிபட்ட விருப்பமாக நான் நினைக்கிறேன்.
மேலும் கூறிய அவர் உலக கோப்பையை போன்ற மிகப்பெரிய தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்பார்கள் அப்படித்தான் பாகிஸ்தான் அணிக்கு அமீர் இருந்தால் பாகிஸ்தான் அணிக்கு நல்லதொரு வெற்றி வாய்ப்பு இருப்பதோடு எதிரணியை பயம் படுத்துவார். மேலும் அச்சம் இல்லாமல் சிறப்பாக விளையாட கூடியவர் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.