இனிமேல் சிம்பு பற்றிய செய்திகளை என்னிடம் கேட்காதீர்கள்.? இவரிடம் கேளுங்கள்.. கையை காட்டிவிட்டு எஸ்கேப் ஆனா மாநாடு படத்தின் தயாரிப்பாளர்.

simbu

அதிரடியான மாற்றங்களுடன் வந்துள்ள நடிகர் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் தற்போது வெளியாக காத்து இருக்கிறது இதை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக பத்து தல மற்றும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர் இருப்பினும் சிம்பு அடுத்தது யார் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி சிம்புவின் அடுத்த படம் குறித்தும், சில சுவாரசியமான செய்திகளையும் கூறியுள்ளார். அவர் கூறியது.

ரசிகர்களே மாநாடு படத்தின் முதல் நாள் சூட்டிங் காட்சியில் இருந்து நேரில் பார்க்கிறேன். நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படம் ஆரம்பித்துவிட்டது அந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் அவர்கள்தான் படத்தை தயாரிக்க உள்ளார். எனவே இனிமேல் சிம்பு பற்றிய அப்டேட் என்னிடம் கேட்க வேண்டாம்.

அவரை ஃபாலோ பண்ணுங்கள் என கூறினார் மேலும் ஐசரி கணேஷ் அண்ணன் அவர்களுக்கும், தம்பி சிம்பு அவர்களுக்கும், கௌதம் மேனன் அவர்களுக்கும் வாழ்த்துகள் என டுவிட் செய்துள்ளார்.

simbu
simbu
ishari ganesh

சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிம்பு ரசிகர்கள் நாங்கள் உங்களையும் விட மாட்டோம் உங்களிடத்தில் மாநாடு மற்றும் சிம்பு புதிய அப்டேட்களை கேட்போம் என கமெண்ட் அடித்து கூறி வருகின்றனர்.