எனக்கும், அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஷாலினியிடம் ஓவராக பேசிய அஜித்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி

ajith
ajith

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடுபவர் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது 62வது திரைப் படத்தில் நடிக்க உள்ளார் வெகு விரைவிலேயே அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. திரை பிஸியான நடிகராக ஓடும் அஜித் நிஜ வாழ்க்கையில் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர்.

இப்பொழுது இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் அதற்கு காரணம் குடும்பத்தையும், தொழிலையும் தனித்தனியாக அஜித் பார்ப்பதால் இன்று அளவிலும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை அதனால் வாழ்க்கை ஜாலியாக அஜித்துக்கு  போகிறது. ஷாலினி மகன், மகளை மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.

அஜித் சினிமா துறையைச் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் சுரேஷ் சந்திராவை வைத்து பார்த்துக் கொள்கிறார் அதனால் எந்த ஒரு நெருக்கடியும் அஜித்திற்கு வந்ததில்லை.. இப்படி ஓடும் அஜித் ஷாலினி எது கேட்டாலும் உடனே செய்து விடுவார் மேலும் அவர் சொல்வதை எப்பொழுதுமே தவிர்க்க மாட்டார். அப்படி ஒரு தடவை அஜித் ஷாலினிக்கு நெருங்கிய நண்பர் வெளிநாட்டில் இருக்கிறார்.

அவர் ஒருநாள் ஷாலினியிடம் அஜித்தை வைத்து படம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் அஜித்திடம் கால்ஷீட் கொடுக்க சொல்லுங்கள் என சொல்லி இருக்கிறார். ஷாலினியும், அஜித்தை சந்தித்து சொல்லி உள்ளார் ஆனால் அஜித் இந்த விஷயம் எல்லாம் சுரேஷ் சந்திரா தான் பார்த்துக் கொள்கிறார்.

அவரை மீறி யாரும் கால்ஷீட் தருவது இல்லை என ஷாலினியிடம் கூறிவிட்டாராம்.. அதேபோல் தான் சுரேஷ் சந்திராவிடம் குடும்ப விஷயத்தில் நுழையக்கூடாது என கூறியிருக்கிறாராம்.. இந்த காரணத்தினால் தான் அஜீத்  சினிமா வாழ்க்கையும் சரி குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்க காரணம் என சொல்லப்படுகிறது இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.