தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல்முறையாக கை கோர்த்து நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பு, பிரபு, ஜெயசுதா.
மற்றும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூன்றாவது கட்டப்பட பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த படமும் விஜய்க்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர்.
விஜய் படம் என்றால் அஜித் படம் மோதுவது வழக்கம் அப்படி தான் இருந்து வருகிறது அந்த வகையில் அஜித்தின் ஏகே 61 திரைப்படம் வாரிசு படத்தை எதிர்த்து மோதும் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது மேனேஜர் ஜெகதீஷை அழைத்து ஒரு கட்டளையை இட்டுள்ளார். ஜெகதீஷ்க்கு போனி கபூர் மற்றும் வினோத்தை நன்கு தெரியும்..
அதனால் விஜய் ஜெகதீஷிடம் நீங்கள் அடிக்கடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நேரிடும் அந்த சமயத்தில் அவர்களிடம் பேசும்போது நம் படத்தைப் பற்றியோ அல்லது அவர்கள் படத்தை பற்றியோ எதுவும் பேச வேண்டாம் அது மட்டும் இன்றி அவர்கள் படம் பொங்கலுக்கு வெளிவருகிறதா என்று கேட்க வேண்டாம் என்று விஜய் கட்டளையிட்டுள்ளார்.
இதற்கு காரணம் இப்படி ஏதாவது கேட்டால் அவர்கள் நம்மை பற்றி தவறாக நினைக்கக்கூடும் மேலும் அவர்கள் படம் போட்டியாக வருவது நமக்கு பிடிக்கவில்லை என்று கூட நினைப்பார்கள் அவர்களின் படத்தைப் பற்றி அறிய நாம் ஆர்வமாக இருக்கிறோம் என்று என்ன கூடும் இதனால் படத்தை பற்றி பேசாமல் சாதாரணமாக நலம் விசாரித்துக் கொள்ளுங்கள் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளாராம் என சொல்லப்படுகிறது.